ஞாயிறு, 16 ஜூலை, 2017

பிராட்லா



உலகப் புகழ் பெற்ற சார்லஸ் பிராட்லா பிறந்த நாள் இந்நாள் (1833). அவரைப்பற்றி அவரின் அருமை மகள் திருமதி பிராட்லா பானர் ஒரு வரியில் சொல்கிறார்.
றவைடிரவ படின டஎநன, யனே றவைடிரவ படின னநைன.
கடவுளின்றியே பிராட்லா வாழ்ந்தார், கடவுளின்றியே மறைந்தார்  ஆகா, எவ்வளவு அருமையான உண்மை!
சொன்னாலும், சொல்லாவிட்டாலும் எந்த மனிதருக்கும் பொருந்தக்கூடிய யதார்த்த உண்மைதானே இது.
இவர் பள்ளி ஒன்றில் பாதிரி ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அதன் காரணமாக ஆழமாகப் பைபிளைப் படிக்கவும் ஆரம்பித்தார். அதன் விளைவு நாத்திகர் ஆனார்.
அலசி ஆராய்ந்தபோது அறிவுக்குப் பொருத்தமற்ற ஏராளமான சங்கதிகள் பைபிளில் இருக்கக் கண்டார். விளைவு  அந்தப் பள்ளி ஆசிரியர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். அறிவைச் செலுத்தி ஆராய்ந்தால் மதம் இரத்தினக் கம்பளம் போட்டா வரவேற்கும்?
அய்க்னோகிளாஸ்ட் (சிலை உடைப்பாளன்) என்ற புனைப் பெயரில் கட்டுரைகளை எழுதி வந்தார்.
கடவுள் மறுப்பு என்பதை அவர் ஓர் இலட்சியமாகக் கருதவில்லை! தமது இலட்சியத்தை அடைய ஒரு மார்க்கமாகவே அதனைக் கருதினார்.
பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். தொடர்ந்து இரண்டு முறை தோல்வியைச் சந்தித்தார். மூன்றாவது முறையாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.
பிரிட்டன் நாடாளுமன்ற விதிகளின்படி கடவுளின் பெயரால்தான் பதவிப் பிரமாணம் எடுக்கவேண்டும்.  பரிசுத்த நாத்திகரான பிராட்லா மறுத்தார்  இதற்காக ஆறு ஆண்டுகாலம் போராடினார். கடைசியில் வென்றார். மனசாட்சிப்படியே உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
அவர் வெற்றி அவரோடு முடிந்துவிடக் கூடாதல்லவா? மனசாட்சிப்படி உறுதிமொழி எடுக்கலாம் என்பதற்கான ஒரு மசோதாவையே 1888 இல் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து அதனை நிறைவேற்றும்படிச் செய்தார் என்றால், அந்த நாத்திகவாதியின் சாதனை சாதாரணமானதா?
இன்றைக்கு இந்தியத் துணைக் கண்டத்திலேயே சட்டப்பேரவையிலும் சரி, நாடாளுமன்றத்திலும் சரி, அத்தனை உறுப்பினர்களும் மனசாட்சிப்படி என்று கூறி பதவிப் பிரமாணம் எடுக்கும் உறுப்பினர்களைக் கொண்ட ஒரே கட்சி தி.மு..வே!
ஆம், சார்லஸ் பிராட்லா வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
26.9.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...