பழநி வட்டாரங்களில் ஒரு பீதியைக் கிளப்பி விட்டுள்ள னர் கிழவி ஒருவர் கதவைத் தட்டி தண்ணீர் கேட்டதாகவும், அப்படித் தண்ணீர் கொடுத்த வீட்டில் உள்ள ஆண் உடல் நலம் பாதிக்கப்படுவதாகவும் ஒரு புரளி!
உடனே வீட்டின் நிலை வாசப்படியில்தான் வேப்பிலை தொங்கி விடுமே!
இது ஒன்றும் புதிதல்ல;
பல ஊர்களில் பல கால கட்டங்களில் கிளப்பி விடப்பட்ட புழுதி, சில நாள்களில் தானே அடங் கிப் போய் விடும்.
ஊரில் அக்கப் போர் செய்வதற்கென்றே சில பேர்கள் இருப்பார்கள் இதுபோல எதையாவது கொளுத்திப் போட்டு வேடிக்கைப் பார்ப்பது என்பது அவர்களுக்கு உள்ளுக்குள் ஒரு வகை குஷி அவ்வளவுதான்.
பாலசமுத்திரம் ஊராட்சியைச் சேர்ந்த சின்னத்தாய் என்பவர் நச்சென்று கூறியுள்ளார். இதெல்லாம் வதந்திதான்; என்றாலும் தேவையில்லாமல் அச்சப்படுகிறார்கள் எ ன்று மட்டையடியாகக் கூறியுள்ளனர்.
பேரம்பாக்கத்தில் பேய் என்று கிளப்பினார்கள். திராவிடர் கழக மகளிர் அணி அந்தப் பகுதிக்குப் படையெடுத்துச் சென்று (1991 ஏப்ரல்) விழிப் புணர்வுப் பிரச்சாரம் செய்து, சுடுகாட்டில் குடியிருந்ததாகப் பரப்பப்பட்ட அந்த முள் செடியை திராவிடர் கழக மகளிர் அணி யைச் சேர்ந்தவர்களே வெட்டி எடுத்து வந்து சாலை நடுவே போட்டுக் கொளுத்திக் காட்டினர். பேய்ப் புரளி, அச்சம் அந்தப் பொழுதே போன இடம் தெரியாமல் போயே போச்சு!
தலையில்லா முண்டம் டீ குடிக்கிறது என்று சென்னை யிலே கூடப் பிரச்சாரம் செய்தார்கள்; விவஸ்தை கெட்ட நம் நாட்டு ஏடுகளுக்கு அதுதான் தலைப்புச் செய்தி. அப்பொழுது சென்னைப் பெரு நகரக் காவல் துறை ஆணையராகயிருந்த ஸ்ரீபால் அய்.பி.எஸ்.
அவர்கள் மிக அழகாகச் சொன்னார். அப்படி ஏதாவது முண்டம், ஒரு தலையில்லா முண்டம் சொல்லியிருக்கும் என்றார். அத்தோடு அந்த முண்டத்தின் கதை சிறுகதையாக முடிந்து போனது.
திடீர் என்று வேப்ப மரத்தில் பால் என்பார்கள்; முண்டக் கண்ணி அம்மன் அழுதாள் என்று ஒப்பாரி வைப்பார்கள்; இரண்டொரு நாள் பரபரப்பு அவ்வளவுதான் மக்கள் மறந்து விடுவார்கள்.
பிள்ளையார் பால் குடித்தார் என்று `பிரபல சந்திரா சாமி யாரே கிளப்பி விடவில்லையா?
இதுபோன்ற அக்கப்போர் பேர்வழிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, லாக்கப்பில் தள்ளினால் தானாகவே புரளிகள் புதை குழிக்குள் போய் விடுமே!
படிக்காத ஒரு சின்னத்தாய் அம்மாவுக்கு இருக்கும் புத்தியும், துணிவும், படித்தவர்களிடத்தில் இல்லையே
வெட்கக் கேடு!
16.9.2007 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக