ஞாயிறு, 16 ஜூலை, 2017

திண்ணியம்


திண்ணியம்  நினைவிருக்கிறதா? திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஊர் அது. அந்த ஊரில் நடத்தப்பட்ட ஒரு கொடுமை! `சீ, இவர்களும் மனிதர்களா? என்ற கேள்வியை இப்பொழுதும் எழுப்பிக் கொண்டு இருக்கிறது.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு தோழனை அவ்வூரைச் சேர்ந்த ஜாதி வெறியர்கள் கொடுமைப்படுத்தினர். கொடுமையென்றால் சாதாரணமா? மனிதனின் கழிவைத் தின்ன வைத்தனர் என்பதுதான் அந்தக் கொடுமை!

அர்த்தமுள்ள இந்த இந்து மதத்திற்கே உரித்தான இந்த ஜாதி என்கிற உணர்வு பிறக்கும்போதே தாய்ப்பால்போல ஊட்டப்பட்டு, குருதியோடு குருதியாகக் கொப்பளித்துக் கொம்பு முளைத்து முறுக்கேறி வளர்ந்து விடுகிறது.

அதனுடைய தீய பாய்ச்சல்தான் திண்ணிய இழவு! இது தொடர்பாக எட்டுப் பேர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு, பல வருடங்கள் நீதிமன்றத்தின் நடவடிக்கைக்கு உட்பட்டு கடைசியில் தீர்ப்பும் வெளிவந்து விட்டது. எட்டு பேர்களில் ஒருவர் மட்டும்தான் குற்ற வாளியாம். மூன்று மாத சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதில் என்ன கொடுமை யென்றால் தண்டனைக்கு ஆளான அந்தக் குற்றவாளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியராம்.

எப்படிப்பட்ட `தவப் புதல்வர்களை ஆசிரியர் குடும்பம் பெற்றிருக்கிறது. இதுபோன்றவர்கள் ஆசிரியர்களாக இருந்தால் அவர்களால் தயாரிக்கப்பட்டவர்கள் மனிதர்களாக இருப்பார்களா?

நம் நாட்டுக் கல்விமுறை வெறும் மதிப்பெண்கள் பெரும் யோக்கியதையில்தானே தயாரிக்கப்படுகிறது. மனித நேயம், சகோதரத்துவம், தொண்டு மனப்பான்மை, அகன்ற மனப்பாங்கு, சீர்தூக்கும் அறிவு என்கிற திசையில் மாணவர்கள் வார்த்தெடுக்கப்படாவிட்டால், அது என்ன கல்வி, வெங்காயம்!

ஆட்டுக்கு வால் ஒன்று, கால்கள் நான்கு என்று சொல்லிக் கொடுக்க ஒரு கல்வி தேவையா என்று கேட்டார் தந்தை பெரியார்.

இன்னொன்றையும் மிக ``அழகாகவே சொன்னார் அய்யா! நம் நாட்டுப் படிப்பு என்பது வயிற்றுப் பிழைப்புக்கான ஒரு லைசென்ஸ் என் றார்.

லைசென்ஸ் பெற்ற பலர் பல தொழில்களை நடத்தும்போது எப்படி எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்பதை அன்றாடம் நம் வீட்டின் அருகிலேயே கூடப் பார்த்து வருகி றோமே!
இந்த வயிற்றுப் பிழைப்பு லைசென்ஸ் கல்வி முறை மாறுமாசிந்தனையில் நல் மணம் கமழும் பூக்களை நம் கல்விமுறை மலர்விக்குமா என்பதுதான் நம் கேள்வி!

13.9.2007 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...