ஞாயிறு, 16 ஜூலை, 2017

பேராசிரியர்


தி.மு.. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு நிதியமைச்சருமான மானமிகு மாண்புமிகு பேராசிரியர் . அன்பழகன் அவர்கள் நேற்று (23.10.2009) மாலை சென்னை பாவாணர் நூலகக் கட்டடத்தில்  பெரும்புலவர் மணியன் அவர்களால் எழுதப்பட்ட பெரியார் காவியம் வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரை  அறிவின் மின்னல் வெட்டு!

இங்கே பேசிய பேராசிரியர் . இராமசாமியாக இருந்தாலும் சரி, அவருக்குத் தூண்டுகோலாக இருந்த கவிஞர் கருணானந்தமாக இருந்தாலும் சரி, இந்நூலை யாத்த புலவர் மணியனாக இருந்தாலும் சரி, நானாக இருந்தாலும் சரி, இப்படி மேடை அமைத்தும், அதில் நம் சிந்தனைகளை பேசுவதுமான எல்லா நிலைகளுக்கும் அடித்தளமே தந்தை பெரியார்தான்முன்னேர் சென்ற முதல் வீரரும் அவரேதான்!

அண்ணா அறிஞர்தான்பெருமைக்குரியர்தான்  ஆனாலும் பெரியார் என்ற மாமனிதர் இல்லை என்றால், அண்ணா இல்லைஅண்ணாவே இல்லை என்றால், நாம் இல்லை என்று அர்த்தம் என்று எளிய மொழியில் பளிச்சென்று பொருள் பொதிந்த சொற்களை வெளிப்படுத்தினார்.

தமிழன் மிராசுதாரராக இருப்பான், வயதிலும் முதிர்ந்தவனாக இருப்பான், ஒரு பார்ப்பானை நேரில் கண்டுவிட்டால் தோளில் போட்டிருந்த துண்டினை எடுத்து கக்கத்தில் வைத்துக்கொள்வான், ஏன், இன்னும் சொல்லப்போனால், அந்தச் சிறுவனான பார்ப்பனர் காலிலும் விழுவான்.

நீ மனிதன்  நீ ஏன் அவன் காலில் விழவேண்டும்? எவன் காலிலும் எவனும் விழவேண்டாம் என்ற தன்மானத்தை நம் உணர்வில் ஊட்டியவர்தான் தந்தை பெரியார் என்று பேராசிரியர் சொன்னவிதம் ஆன்றவிந்த அவையை நிசப்தம் கொள்ளச் செய்தது.

நான் மயிலாடுதுறையில் படித்தவன்அய்ந்தாம் வயதிலேயே தந்தை பெரியாரைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததுண்டு.

மாயவரம் நடராசன் என் தந்தையாரின் அக்காள் மகன் - அவர் தந்தை பெரியாரின் பாதுகாவலர்!
டாக்டரிடம் செல்லவேண்டும் என்றால் ஒரு வரதாச்சாரி, ஒரு ரெங்காச்சாரி, வக்கீலிடம் செல்லவேண்டுமென்றால் ஒரு வெங்கட்ராமய்யர், முத்துசாமி அய்யர்  இப்படிதானிருக்கும் அந்தக் காலகட்டத்தில்.

நான் படித்த மயிலாடுதுறை நகராட்சிப் பள்ளியில் 40 ஆசிரியர்கள் என்றால், 37 பேர் பார்ப்பனர்கள். மூவர்தான் தமிழர்கள். அதில் ஒருவர் மேன்யூவல் டிராயிங் ஆசிரியர்.

துலாக்கட்டத்தில் பார்ப்பனர்களைத் தவிர யாரும் குளிக்க முடியாது என்ற நிலை!

ஒரு பெரும்பான்மை இனம் இப்படி குறுகிக் கிடப்பது ஏன் என்ற எண்ணம் எனக்கு மாணவர் பருவத்திலேயே ஏற்பட்டதுண்டு. அந்தச் சூழலில் நான் வளர்ந்தேன்.
இந்த ஆதிக்கத்தை எல்லாம் புரட்டிப்போட்ட மாமனிதர்தான் தந்தை பெரியார்! என்று ஒரு குறுகிய கால வட்டத்தில், கூடியிருந்த மக்களின் சிந்தனைத் திரையில் அறிவார்ந்த சித்திரத்தைத் தீட்டினார் பேராசிரியர் என்றால் மிகையாகாது!

இளைஞர்கள் மத்தியில் கொண்டு போகவேண்டிய கருத்துரை இது.

வாழ்க பேராசிரியர்!

24.10.2009  (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...