பெரியார் வாழ்ந்த போதும் எதிர் நீச்சல்! மறைந்த நிலையிலும் எதிர் நீச்சலா? ஆம்,
அதுதான், தந்தை பெரியார் அவர்களுக்கே உரிய தனித்தன்மை!
பெரியார் திரைப்படமாக வந்த போதும்கூட குறுக்குச்சால் ஓட்டிய குறுமதியோர் இருக்கவே செய்தனர்.
அதையும் மிதித்துத் தள்ளி பெரியார் நூறு நாள் நடந்தார். இந்திய அரசே மாநில மொழிகளில் சிறந்த படம் என்ற விருதினை வழங்கிப் பெருமை பெற்றது.
தமிழ்நாடு அரசோ,
நான்கு விருதுகளை வழங்கி நற்பெயரைப் பெற்றது.
பெரியார் திரைப்படத்துக்கான விருதினை டில்லியில் குடியரசுத் தலைவர் வழங்கினார். பொறுக்குமா பூசுரக் கூட்டத்துக்கு? ஏற்பரா இன இழிவில் சுகம் கண்ட எந்தமிழர்?
குடியரசுத் தலைவர் பெரியார் திரைப்படத்துக்கு விருதினை வழங்கிய ஒளிப்படத்தை வெளியிடும் பரந்த மனம் இல்லாவிட்டாலும் ஒழிந்து போகட்டும்! ஒரு நான்கு வரி சேதியினைப் போட்டால்கூட பாவம் வந்து ஒட்டிக் கொள்ளுமா?
தீட்டு வந்து தீண்டி விடுமா?
பார்ப்பனர்கள் எப்படி இருக்கிறார்கள்? பாழும் தமிழர்களும் எப்படிதான் இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு கண்கண்ட சாட்சியமே!
ஊடகங்களை என்றைக்குமே பெரியார் நம்பி வாழ்ந்ததில்லை. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்களை பொதுக் கூட்டத்தின் வாயிலாக சந்தித்து நேருக்கு நேர் அவர்களின் நெஞ்சத்திரையிலே தோன்றி அறிவார்ந்த கருத்துகளைச் செதுக்கியவர் ஆயிற்றே!
நாட்டைப் பீடித்த அய்ந்து நோய்களில் பத்திரிகையையும் தந்தை பெரியார் ஏன் சேர்த்தார் என்ற அருமை, காலந் தாழ்ந்தாலும் இப்பொழுதாவது தெரிந்து கொள்ள வேண்டுமே!
இந்து ஏட்டில் ஹயேனரசய ஹடளடி ளுயீடிமந என்ற சேதி வந்த நேரத்தில் அறிஞர் அண்ணா சொன்னாராம். அண்ணாதுரை பாடினார் என்ற செய்தி வந்து விடக் கூடாதல்லவா
அதனால்தான்
அவ்வாறு போட்டிருப்பதாக அவருக்கே உரித்தான தன்மையில் கூறுவாராம்.
தந்தை பெரியாரை இருட்டடிக்க இருட்டடிக்க, உத்தரப்பிரதேசத்தில் சூத்திரா என்ற அமைப்பு தோன்றி ராமனுக்கு செருப்பு மாலை சூட்டியுள்ளது என்பதை மறக்க வேண்டாம்!
25.10.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக