கேள்வி: டிஸ்கவரி விண்கலத்தில் பறந்த சுனிதா வில்லியம்ஸ் தம்முடன் கீதை புத்தகம், விநாயகர் சிலை ஆகியவற்றை எடுத்துச் சொன்றுள்ளாராமே?
பதில்: ஆமென்! (கல்கி 31.12.2006)
இப்படி ஒரு கேள்வி பதிலை வெளியிட்ட கல்கி படம் ஒன்றையும் அச்சிட்டுள்ளது. அந்தப் பெண்ணின் படத்தை வெளியிட்டு படத்துக்கு மேல் ``வழித்துணை வாசிப்பு என்கிற தலைப்பையும் தந்துள்ளது. விண்வெளி செல்லும் போது கீதையைப் படிக்கலாம் என்ற அர்த்தத்தில் இதனை வெளியிட்டுள்ளது.
ஒரு பெண் விண்வெளிக்குச் செல்லுவது என்பது வியக்கத்தக்கது, வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது.
அதே நேரத்தில் அவர் மேற்கொண்ட செயல் விஞ்ஞான ரீதியானது என்பதை மறந்து விடக் கூடாது.
அதற்கு வழித் துணையாக இருக்க வேண்டியது கீதைப் புத்தகமா என்பதுன் கேள்வி.
பெண்களைப்பற்றி கீதையின் கணிப்பு என்ன?
சூத்திரர்கள் பெண்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று பெண்களை இழிவுபடுத்தும் நூல் அல்லவா அது.
அதுவும் பகவான் கிருஷ்ணனே அப்படி சொன்னதாகக் கூறும் நூல் அல்லவா!
இந்தத் தன்மையுள்ள ஒரு நூலை விண்வெளி செல்லும் ஒரு வீராங்கனை படித்தால் வீரம் விளையுமா,
தன்னம்பிக்கை ஏற்படுமா, துணிவுதான் துளிர்க்குமா?
ஒரு கிறித்தவரைத் துணை வராகக் கொண்டிருந்தாலும் பாலூட்டும் பருவத்தில் ஒரு பெண்ணிடம் ஊட்டப்படும் மூடத்தனம்
அந்தப் பெண் விண்வெளி வீராங்கனையாக ஒளி வீசும்போதுகூட அவரை விட்டு அகலவில்லை என்பது கவனிக் கத்தக்கதாகும்.
உண்மையிலேயே கீதையை அந்தப் பெண் கருத்தூன்றிப் படித்திருந்தால் போயும் போயும் இதனை வாசிப்புக்காக எடுத்து வந்தோமே என்ற எண்ணம் தான் மேலோங்கி நிற்கும்.
ருசியாவைச் சேர்ந்த யூரிக காரின் 1961இல் விண்வெளிக்கு சென்று வந்தார். அவர் அப்போது என்ன சொன்னார்? `நான் கடவுளை விண்வெளியில் காணவில்லை என்று செல்லவில்லையா? இதுதான் விஞ்ஞானத்துக்கு அழகு!
கிறித்தவரை மணந்தாலும் அடிப்படைப் புத்தி மட்டும் மத அழுக்குக்குள்ளேயே இருக்கிறதே! (அதற்கு அடையாளம் தான் அழுக்குருண்டை விநாயகரையும் எடுத்துச் சென்றாரோ!).
31.12.2006 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக