ஞாயிறு, 16 ஜூலை, 2017

தமிழிசை?


இது ஓர் இசை விழா பருவம்; சென்னையில் எங்கு பார்த்தாலும் இசை நிகழ்ச்சிகள் அடைமழையாகக் கொட்டுகின்றன.

இதுகுறித்து தினமணி (31.12.2009, பக்கம் 2) என்ன எழுதுகிறது?

தமிழ் இசை விழா என்று பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஏன் இத்தனை தீட்சிதர்களும், வாசுதேவாச்சாரிகளும், புரந்தரதாஸர்களும்? நடத்துகிறவர்கள் நடத்துகிறார்கள். பாடுகிறவர்கள் பாடினால்தானே? இப்படி விமர்சனம் செய்வது தினமணி  கவனம் இருக்கட்டும்; சென்னை ராணி சீதை மன்றத்தில் திங்களன்று நடந்த, இசை நிகழ்ச்சி பற்றிதான் தினமணி இப்படி விமர்சித்திருக்கிறது பானை சோற்றுக்கான ஒரு பருக்கையின் பதம் இது. நடப்பது தமிழிசைதானா என்று நாம் வினா எழுப்பினால், இவாளுக்கு வேறு வேலையே இல்லை. கட்டிய வீட்டுக்கு நொட்டாரம் சொல்லுவதுதான் இவாளின் பிழைப்பு என்று எரிச்சலைக்கக்குவார்கள்.

சொல்லுவது தினமணி ஆயிற்றே! இதற்கு உள்நோக்கம் கற்பிக்க முடியுமா? தினமணிக்கே பொறுக்க முடியவில்லையென்றால், தலைநகரில் நடப்பவை தமிழிசை விழா என்ற முகமூடியில் சமஸ்கிருத மயமாக்கப்பட்ட தெலுங்குக் கீர்த்தனைகள் தாம் என்பதில் அய்யம் என்ன?

இவ்வளவுக்கும் பார்ப்பனர்கள் தலையில் தூக்கி வைத்துக் கூத்தாடும் மும்மூர்த்திகள் தியாகையர் (1767 1847), சியாமா சாஸ்திரி (1762 1827), முத்துசாமி தீட்சிதர் (1776 1835) இவர்களுக்கு முன் கீர்த்தனைகளைச் சமைத்துத் தந்தவர்கள். தமிழ் மும்மூர்த்திகள்தாம். அருணாசலக்கவிராயர் (1712 1779) சீர்காழி முத்துத்தாண்டவர் (1525 1600) தில்லை விடங்கன் மாரிமுத்தாபிள்ளை (1712 1787) இவர்களும் பக்திப் பாடல்-களைப் பாடியவர்கள்தாம்!

என்ன வேறுபாடு? பார்ப்பனர்கள் பாடியது

(1.1. 2010 - விடுதலை ஒற்றைப் பத்தி -3 )

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 3,

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...