சைவ சமயத்தில் நாயன்மார்கள் 63 பேர்கள் என்றால், வைணவ மதத்தில் ஆழ்வார்கள் 12 பேர். அந்தப் பட்டியலில் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் என்னும் ஆண்டாளும் அடங்குவார்.
பக்தையாகிய ஆண்டாள் என்னும் பெண்,
கடவுளாகிய திருமாலை தன் கணவனாக வரித்துப் பாடியதாகக் கூறப்படும் திருப்பாவையைப் படித்தால், காம வெறி மேலிட்ட ஒரு பெண் விரகதாபத்தால் விகாரமாகப் பாடியிருப்பதாகத்தான் கருதிட முடியும்
அந்த அளவுக்கு வெறியின் உச்சத்தில் இருந்திருக்கிறார் அந்தப் பருவப் பெண்.
பெரியாழ்வார் ஆண்டாளின் தந்தையாகக் கூறப்படுகிறார். காலாகாலத்தில் அந்தப் பெண்ணுக்கு ஒரு காளையிடம் கைபிடித்துக் கொடுத்திருந்தால், இந்த அளவுக்கு அந்தப் பெண் பருவக் கோளாறு என்னும் நோயால் தலைவிரித்து ஆடியிருக்கமாட்டாள்.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், ஆண்டாள் என்ற ஒரு பக்தையே கிடையாது என்று சொல்லுபவர் சாதாரண ஆசாமியல்ல, சாட்சாத் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி)தான் அவ்வாறு சொல்லியிருக்கிறார். அவர் சைவர் என்றால், வேண்டும் என்றே சொல்லுகிறார் என்று உள்நோக்கம் கற்பிக்க முடியும்; ஆனால், ஆச்சாரியார் அசல் வைஷ்ணவர் ஆயிற்றே!
என்ன சொல்லுகிறார் ஆச்சாரியார்?
ஆண்டாள் என்னும் ஸ்திரி இருந்ததேயில்லை. நாலாயிரம் பிரபந்தத்தில் ஆண்டாள் பாடியதாகச் சொல்லப்படும் பாசுரங்கள் அவர் பாடியவையல்ல; பெரியாழ்வார் என்னும் ஆழ்வார் சில பாசுரங்களைப் பாடி, அப்பாசுரங்களை ஆண்டாள் என்னும் ஒரு பெயரால் வெளிப்படுத்தினார் என்று திரிவேணி என்னும் மாதப் பத்திரிகையில் 1946 செப்டம்பர் இதழில் எழுதியிருக்கிறாரே!
பெரியாழ்வார் பொய்யரா? அல்லது ராஜாஜி பொய்யரா? வைணவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்?
22.12.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக