பார்ப்பனர்களை அடையாளம் காணவேண்டுமா? அதற்காக கஷாயம் குடிக்கவேண்டாம்; கடப்பாரையை விழுங்க வேண்டாம். ஒரே ஒரு பிரச்சினையில் அவர்களை அப்படியே முழுமையாக நிர்வாணமாக அடையாளம் காணலாம்.
தமிழ் என்ற அந்தக் கண்ணாடியில் அவர்களின் முகபாவங்களை அச்சுப்புள்ளி அடையாளமாகத் தெரிந்துகொண்டுவிடலாம்.
கேள்வி: தமிழ் மொழியை செம்மொழியாக்கச் சட்டம் கொண்டு வந்தால் என்னென்ன பயன்....
பதில்: காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்... ஏழை நெசவாளர் வீட்டுத் தறி நிற்காமல் இயங்கும். ஒருவேளை கஞ்சிக்கே வழி இல்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும். தமிழ் மக்கள் அனைவரும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளை மறந்து, தம் பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிகளில் சேர்ப்பர்; சக தமிழர்களுடன் தமிழிலேயே பேசுவர்... இவ்வளவும் நடக்கப்போகிறது பாருங்கள்.
இந்தக் கேள்வியும், பதிலும் இடம்பெற்றிருப்பது தினமலர் என்ற தினவெடுக்கும் உச்சிக்குடுமியின் ஏட்டில் (நாள்:
13.6.2004).
அய்ந்து ஆண்டுகளுக்குப்பின் அதே தினமலர் (17.7.2009) டவுட் தனபாலை விட்டுப் பேச வைத்திருக்கிறது.
தமிழ் செம்மொழி ஆனதால் ஆட்டையாம்பட்டி மாடசாமிக்கு என்ன பலன் கிடைக்கிறது? என்கிற நக்கல்.
தமிழைத் தாய்மொழி என்று நேசிக்கிற எந்தக் கிறுக்கனும் தினமலர்போல பேசமாட்டான்.
தினமலரின் அதே பாணியில் நாம் வினாக்களை தொடுக்க முடியாதா?
பி.ஜே.பி.
ஆட்சி யில் ஒரு ஆண்டு முழுவதும் சமஸ்கிருத ஆண்டு என்று கூறி கோடிக்கணக்கான மக்கள் பணத்தைக் கொட்டி அழுதார்களே... அப்பொழுது ஒவ்வொ ருவர் வீட்டிலும் மட்டன் பிரியாணி கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டியதா? ஆட்டை யாம்பட்டி மாடசாமியின் வீட்டில் தறி நில்லாமல் இயங்கியதா?
இராமேசுவரத்திலும், திருச்செந்தூரிலும் குட முழுக்கு நடந்ததே... குலசேகரன்பட்டினம் குப்பன் வீட்டில் குடம் குடமாகப் பால் வந்து இறங்கியதா?
திருவாரூரில் தேர் ஓடியதே, திருக்காட்டுப் பள்ளி திருஞானத்தின் மோட்டார் பைக் பெட்ரோல் இல்லாமல் ஓடியதா?
கேள்விகளைக் கேட்டுக்கொண்டே போகலாம்.
தமிழ் செம்மொழி என்ற அங்கீகாரம் அதனைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களுக்கான உணர்வு ரீதியான, பண்பாட்டு ரீதியான பெருமிதம்! வரலாறு உள்ள ஓர் இனத்துக்கான பீடு!
செத்த மொழிக்கே சிங்காரம் செய்யும் செப்படி வித்தைக்காரர்கள் அவர்கள்! உயிரோட்டம் உள்ள, உலகில் பத்துகோடி மக்கள் பேசக்கூடிய தமிழ் மொழிக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரத்தைக் கண்டு ஆத்திரப்படுகிறார்கள்.
கூந்தல் உள்ள பெண் அள்ளிமுடிகிறார் மொட்டைப் பார்ப்பனப் பெண் புரண்டு அழுகிறார் அவ்வளவுதான்!
18.7.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக