ஞாயிறு, 16 ஜூலை, 2017

கொலம்பஸ்கள்


அமெரிக்காவைக் கண்டு பிடித்தது கொலம்பஸ் என் பார்கள். அதில்கூட சர்ச்சை கள் உண்டு. ஆனால், இப்பொழுது புதிய கொலம்பஸ்கள் இந்தியாவில் புதிது புதிதாகக் கண்டுபிடித்துக் கொண்டு இருக்கின்றனர்.

கிரிக்கெட் உலகக் கோப்பையில் முதல் சுற்றிலேயே இந்தியா கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளப்பட்டுவிட்டது. வெளிரிய முகத்தோடு, துண்டைக் காணோம்  வேட்டியைக் காணோம் என்று இந்தியாவுக்கு ஓடிவந்தது இந்தியக் கிரிக்கெட் குழு.

இப்பொழுது பிரேதப் பரிசோதனையைத் (Post Mortum) தொடங்கி விட்டனர். ஊரை ஏமாற்றி உலையில் போடும் சோதிடர்கள் வழக்கம் போலக் களத்தில் குதித்துள்ளனர்.

இந்தியா தோல்வி அடைந்ததற்குக் காரணம் தெரியுமா? இதோ கண்டுபிடித்துவிட்டார்கள். பயிற்சியாளர் சேப்பலின் கிரகம் சரியில்லையாம்  அது தான் இந்தியாவின் தோல் விக்குக் காரணமாம். சிம்லா வில் நடைபெற்ற சோதிடர்கள் மாநாட்டில் `பிரபல அக்ஷய குமார் சர்மா தெரிவித்து விட்டாராம்!

அப்படியே பார்த்தாலும், பயிற்சியாளர் என்ன களத்தில் நின்று விளையாடினாரா? சரி பயிற்சியாளரின் கிரகம்தான் சரியில்லை  விளையாட்டுக் குழுவில் இடம்பெற்ற 15 பேர்களின் கிரகங்களும்கூட சுத்த மோசம்தானா?

அரும்பாடு பட்டு தன்னம் பிக்கையோடு தன் திறனை வெளிப்படுத்திக் கோப்பை யைக் கைப்பற்றிய ஆஸ்திரேலிய வீரர்களின் வெற்றியை இதைவிட வேறு வகையில் கொச்சைப்படுத்திட முடியுமா?

அந்த அணி பயிற்சியாளரின் கிரகம்தான் ஆஸ்திரே லியாவின் வெற்றிக்குக் காரணமா?

மனிதனின் ஆற்றலையும், உழைப்பையும், தன்னம்பிக் கையையும், விடாமுயற்சியையும் கொச்சைப்படுத்தும் சோதிடத்தை நாகரிகம் உள்ள மனிதன் `தூ என்று காறித் துப்பிட வேண்டாமா?

சரி கிரகம்தான் மோசம்  அதற்காகப் பரிகார பூஜை களைச் செய்தார்களேஅதன் யோக்கியதை என்னா யிற்று? கிரிக்கெட் பிள்ளையாரை உருவாக்கி விதம் விதமாகக் கொழுக்கட்டைகளைச் செய்து வைத்துப் படைத்தார்களே  அதன் பலன் என்ன? பிள்ளையார் பெயரைச் சொல்லித் தின்றவன் வயிற்றில் அறுத்து வைத்துக் கட்டியதை விட விளைந்த பயன் என்ன?

பக்தி  மனிதனை எவ்வளவுக் கேவலப்படுத்துகிறது? உடலைக் கொஞ்சம் கிள்ளிப் பார்த்தாவது சுரணையை ஏற்படுத்திச் சிந்திக்கக் கூடாதா?

30.4.2007 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2) 

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...