ஞாயிறு, 16 ஜூலை, 2017

சங்கராச்சாரியாரின் விலை என்ன?




கடைகளில் கத்தரிக்காய், புடலங்காய், வெங்காயம் வாங்குவதுபோல சங்கராச்சாரி பதவியையும் விலைக்கு வாங்கலாம் என்று சொன்னால், சொல்கின்றவர்களைப் பார்த்து நகைப்பார்கள்தான்.

உண்மையைத் தெரிந்து கொண்டால், முதலில் நகைத்தற்காக வெட்கப்படவே செய்வார்கள்.

மாலேகான் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டுள்ள தயானந்த பாண்டே என்பவர் யார் தெரியுமா?

எட்டு ஆண்டுகளுக்கு முன்  இந்திய இராணுவத்தில் விமானப் படையில் பணியாற்றியவர். அதன்பின் வாரணாசிக்கு (காசிக்கு) வந்தார்; சுற்றுமுற்றும் பார்த்தார். சாமியார் தொழில் நல்ல வளமான தொழில் என்பதை உணர்ந்தார். சபலம் தட்டியது.

என்ன செய்தார் தெரியுமா? வாரணாசியில் உள்ள ஒரு மடத்துக்கு ரூபாய் 15 லட்சம் கொடுத்து அந்த மடத்தின் சங்கராச்சாரியார் பதவியை விலைக்கு வாங்கி விட்டாராம்!

சங்கராச்சாரி பதவி என்றால், ஏதோ விலை மதிக்கப்பட முடியாத பெரும் பதவியல்ல; விலைக்கு வாங்கக் கூடிய கத்திரிக்காய் போன்றதுதான் என்பது இதன் மூலம் விளங்கிடவில்லையா?
இந்தச் சங்கராச்சாரி என்ன செய்திருக்கிறார் 700 பேர்களுக்கு வன்முறைப் பயிற்சி கொடுத்து களத்தில் இறக்கிவிட்டுள்ளார். மாலேகான் கலவரம் மற்றும் பல் வேறு மோதல்களுக்கு இவர் ஒரு முக்கிய சூத்திரதாரி என்று தெரிகிறது.

லோகக் குரு இப்பொழுது கம்பியை எண்ணிக்கொண்டு இருக்கிறார்.

ஏற்கெனவே காஞ்சி சங்கராச்சாரிகள் இருவர் கொலை வழக்கில் சிக்கி சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருந்தவர்கள்தான்; இப்பொழுதுகூட பிணையில் தான் வெளியில் திரிகின்றனர்.

பட்டப்பகலில் பச்சைத் தமிழர் காமராசரைப் படுகொலை செய்ய முயன்ற கூட்டத்தில்கூட சங்கராச்சாரிகள் உண்டு (பூரி சங்கராச்சாரிதான்).

முற்றும் துறந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள். ஆனால், பூரி சங்கராச்சாரிக்குக் குடும்பமே உண்டு! காஞ்சி சங்கராச்சாரிக்குக் குடும்பம் இல்லையென்றாலும், காதலிகள் உண்டு. இவர்கள்  லோகக் குருக்களாம்! வெட்கக்கேடு!

20.11.2008 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2

ஆசிரியர் : கலி.புங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...