ஞாயிறு, 16 ஜூலை, 2017

நவம்பர் 11




இந்நாள் வெகு முக்கியமான நாள்  இந்நாளில்தான் நான்கு ஆண்டுகளுக்கு முன் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஆந்திர மாநிலத்தில் (11.11.2004 வியாழன் இரவு) கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியார் சம்பந்தப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஜெயேந்திர சரஸ்வதிமீது குற்றப்பிரிவு 302, 120பி, 34, 201 (கொலை செய்யத் தூண்டுதல், கூட்டுச்சதி, பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல், கொலை) ஆகியவை சுமத்தப்பட்டுள்ளன.

நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. காலதாமதமான தீர்ப்பு மறுக்கப்பட்ட தீர்ப்பு என்றெல்லாம் வித்தாரமாகப் பேசப்பட்டாலும் நடைமுறையில் தாமதிக்கப்பட்ட தீர்ப்புகளாகவே உள்ளன.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கோ 16 ஆண்டுகாலமாக நீதிமன்றத்தால் அடைகாக்கப்படுகிறது. அதன் எதிர்வினையாக மும்பையில் நடைபெற்ற வன்முறைக்குக் காரணமாக இருந்தவர்கள் எல்லாம் தண்டிக் கப்பட்டுவிட்டனர்; மூல வழக்கு  மூலக்கிரகத்தில் பத்திரமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

வெளிமாநிலத்திலே வழக்கு நடத்தப்பட வேண்டும் என்று கோரினார் சங்கராச்சாரியார். நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு புதுச்சேரிக்கு வழக்கு மாற்றப்பட்டது.

தமிழக வழக்கறிஞர்கள் அரசு சார்பில் வாதாடக் கூடாது என்று ஒரு வழக்கு  உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து, நீண்ட காலத்திற்குப்பின் தூக்கம் கலைந்து, சங்கராச்சாரியார் கோரிக்கை ஏற்கப்பட்டது.

அதற்குப் பிறகும் வழக்கு வக்கணையாகத் தானிருக்கிறது. விசாரணைகள் தொடங் கப்படவில்லை! இதற்கிடையே புதுவை அரசு வழக்கறிஞர் மாற்றப்பட்டு புது வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளார். அது மர்மமாகவே இருக்கிறது.

எந்த ஒரு விசாரணைக்கும் வராமல், ஏதாவது ஒரு காரணம் சொல்லி லோககுரு தட்டிக் கழித்துக்கொண்டு இருக்கிறார்.

இப்பொழுது ஊர்வலம், நகர்வலம் வந்து கொண்டிருக்கிறார். ஏதோ சாதனை வீரர் ஒருவர் வருவது மாதிரி வண்ண வண்ண மாக வரவேற்புச் சுவரொட்டிகள் இவருக்கு!  பதாகைகள் வேறு!
ஆன்மிகக் குருவே வருக! இந்து மதத்தின் காவலரே வருக! என்று காரைக்கால் வட்டாரத்தில் பராக்குகள் கூறும் சுவரொட்டிகளைப் பார்க்க நேர்ந்தது.

பார்ப்பனர்களுக்கும், மான உணர்வுக்கும், வெட்கத்திற்கும் ஏதாவது ஊறுகாய் அளவுக்காவது தொடர்பு உண்டா? அதுதான் கிடையாதே!

நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. தண்டனை இருக்கட்டும்  விசாரணை நடக்குமா என்று கேட்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது என்பது வருத்தத்திற்குரியது!

11.11.2008 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2


ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...