தமிழிசை என்ற பெயரில் தலை நகரே களைகட்டி நிற்கிறது.
சபாக்களில் நடைபெறும் இந்த இசை மழையில் லயித்துக் குளிப்பதற்கென்றே ஒரு கூட்டம் உண்டு. பாடுகிறவர் முகபாவனை அஷ்டகோணத்தில் அசைந்தாடும் என்றால், சுவைஞர்களும் அதற்குச் சிறிதும் பஞ்சம் இல்லாமல் தலையை ஆட்டியும், தாளம் போட்டும் சும்மா அமர்க்களப்படுத்தி விடுவார்கள், தார்ப்பாச்சிகளிலிருந்து அம்மாமி வரை பஞ்சக்கச்சம் கிழடுகள் வரை சமாயிக்கும். இராகம், தாளம் என்று ஒருபக்கம் இருந்தாலும், பாடல்களின் தரம் எப்படி இருக்கும்? அதை நாம் சொல்லுவதைவிட இசைக் கச்சேரியை பற்றி விமர்சனம் செய்வதற்கென்றே ஒருவர்
தமிழ்நாட்டில்
அவர்தான் இசை விமர்சகர் சுப்புடு.
அவர் ஒன்றைச் சொல்லுகிறார்
கவனமாக படியுங்கோ! நமக்குள் இருப்பது போலி ஆசாரம். சிலதை புனிதம் இல்லைன்னு தடை பண்ணி வச்சிருக்கோம். ஆன்மிகம் என்பதை நம்மைப்போல தப்பாப் புரிந்து கொண்டவர்கள் யாருமில்லை.
நேத்து மாலை முழுவதும் உனக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். நீ ஏன் வரல்லே? என் தாபம் தாங்கல்லே! இப்படி ஒரு பாட்டு தெலுங்குல இருக்கு. அர்த்தம் தெரிஞ்சா தடை போட்டிடுவாங்க!
ஷேத்திரக்ஞர் பாட்டு ஒண்ணு இருக்கு, கிருஷ்ணா! இப்ப வந்திருக்கிறே.. போ போயிடு. அப்புறம் வா! என் புருஷன் வர்ர நேரமிது! யாராவது அர்த்தம் தெரிஞ்சு ஆடறாங்களா? அஷ்டபதி ஒண்ணு இருக்கு! தலைவி சொல்றா. தாபம் அதியமாயிட்டுது. அவனைப் போய் இழுத்துக் கொண்டு வாடி என்கிறாள். தோழி போயிட்டு லேட்டா வரா. ஏன் தலையெல்லாம் கலைஞ்சிருக்கு?ன்னு தலைவி தோழிகிட்ட கேட்கிறாள். காத்துல கலைஞ்சி போயிட்டுதுன்னு பதில் சொல்றா.ஜீவாத்மாவை பரமாத்மா அடைய தாபத்துல துடிக்கிறது என்பதெல்லாம் மழுப்ப-லாகத்தான் தோன்றது. (தினமலர் 16.12.2003).
இவ்வாறு இசை விமர்சகர் சுப்புடு இசைக் கச்சேரிகளில் பாடப்படும் பாடல்களைப் பற்றி தரம் பிரித்துக் காட்டியுள்ளார்.
இந்து மதத்தில் கடவுள்களின் சேஷ்டைகளெல்லாம் கொக்கோகம் தோற்கும் அளவுக்குத்தானே. கிழம் கிட்டுகள் எல்லாம் ஒருக்கால் இவற்றை ரசிக்கத்தான் கூட்டம் கூட்டமாகப் போறாளோ! யாருகண்டா? இந்தக் கசுமாலங்கள் எல்லாம் நமக்கு என்ன தெரிஞ்சுத் தொலையுது?
3.1. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி 3
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 3,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக