ஞாயிறு, 16 ஜூலை, 2017

குரு


சோதிடத்தில் இந்தக் குருபகவான் படுத்துகிற பாடு கொஞ்சநஞ்சமல்ல. நவக்கிரகங்களுக்குள் குருவும் ஒன்று. அவ்வளவுதான்.

ஆனால், இந்த ஜோதிடர்கள் இருக்கிறார்களே, அவர்களின் உளறலுக்கு ஒரு அளவேயில்லை.

இயற்கையான இந்தக் கிரகங்களுக்கெல்லாம் பிறப்பு வைத்திருக்கிறார்கள். ஆணும், பெண்ணும் கூடிப் பிள்ளையைப் பெற்றுக்கொள்வதுபோல கிரகங்களுக்கும், அப்பா, அம்மா கதை எழுதி வைத்துள்ளனர். (அர்த்தமுள்ள இந்து மதத்தில் இந்த விஷயம் இல்லாமல் வேறு எதுவும் கிடையாதே!)

மகாபாரதக் கதையில், குந்தி மந்திரம் சொல்லி சூரியனை வரவழைத்து புணர்ந்து பிள்ளையைப் பெற்றுக்கொண்டாள் என்று எழுதி வைத்துள்ளனர் என்றால், இவர்களின் கிறுக்குத்தனம் சூரிய வெப்பத்தின் டிகிரியை விட அதிகமாக இருக்கும்போலும்!

9 கோடியே 28 லட்சத்து 30 ஆயிரம் மைல் தூரத்தில் இருக்கும்போதே சூரியனின் வெப்பம் தாங்க முடியாமல் அவதிப்படும் நிலையில், குந்தி என்னும் பெண் சூரியனைப் புணர்ந்து பிள்ளை பெற்றுக்கொண்டாள் என்று கூறுவதும், அதனை நம்புவதும், கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால், கேட்பாருக்கு மதியெங்கே போயிற்று என்ற பழமொழியைத்தான் நினைவூட்டும்.

குருவின் கதையும் அப்படித்தான். இதோ இதழ் ஒன்றில் குரு பெயர்ச்சிபற்றி வெளியிட்டுள்ள அளப்பு:

தேவர்களின் குருவாக பிரஹஸ்பதியாகிய குரு பகவான் திகழ்ந்ததுபோல அசுரர்களுக்கு சுக்கிரன் குருவாக திகழ்ந்தார். இறந்த வர்களை உயிர்த்தெழ வைக்கும் மிருதசஞ்சீவினி மந்திரத்தை சுக்கிரன் அறிந்து இருந்ததால், தேவாசுரப் போரில் மாண்ட அசுரர்களை அந்த மந்திரத் தைப் பயன்படுத்தி சுக்கிரன் உயிர்த்தெழச் செய்தார். இதனால் அசுர பலம் கூடிக் கொண்டே போனது. இதனால் திகைத்துபோன பிரஹஸ்பதி அந்த மந்திரத்தை சுக்கிரனிட மிருந்து கற்று வருவதற்காக தன் மகன் கசனை அனுப்பி வைத்தார்.

கசன் தான் குரு பக வானின் மகன் என்று சிறிதும் காட்டிக்கொள்ளாமல் சுக் கிரன் ஆசிரமத்தில் இருந்து வந்தான். எனினும் அசுரர் களில் சீடர்களில் கசனை அடையாளம் கண்டு அவ னைக் கொன்றனர். எனி னும், சுக்கிரன், கசனை தன்மந்தி ரத்தைப் பயன்படுத்தி காப் பாற்றினார்.

சுக்கிரன் இவ்வாறு காப் பாற்றவே, மூன்றாவது முறை கசனின் பிணத்தை எரித்து அந்த சாம்பலை பானத்தில் கலந்து சுக்கிராச் சாரியாருக்கு கொடுத்துவிட்டனர். அவரும் அதை மறந்து குடித்துவிட்டார்.

சுக்கிரன் மகள் தேவ யானி கசனை காதலித்து வந்தாள். எனவே, கசனை காணாமல் தவித்த அவள் தன் தந்தையிடம் முறையிட்டாள். கசனை வழக்கம்போல தன் சீடர்கள் கொன்றிருப் பார்கள் என்று நினைத்த சுக்கிராச்சாரியார் அவனை உயிர் பெற வைப்பதற்காக மிருத சஞ்சீவினி மந்திரத் தைப் பிரயோகித்தார்.

அவரது வயிற்றுக்குள் இருந்த கசன் உயிர்பெற் றான். கசனை வெளியே கொண்டுவர வேண்டுமா னால், சுக்கிரன் மாள வேண் டியிருக்கும். எனவே, அந்த மந்திரத்தை கசனிடம் உப தேசித்தார். கசன் சுக்கிரனின் வயிற்றை பிளந்துகொண்டு வெளியே வந்தார். கீழே இறந்து கிடந்த சுக்கிரனை மிருத சஞ்சீவினி மந்திரத் தைப் பயன்படுத்தி உயிர்த் தெழச் செய்தான். பிறகு தன் தந்தையிடம் சென்று மிருத சஞ்சீவினி மந்திரத்தைக் கூறினார்.

ஏதாவது புரிகிறதா? ஒன்று மட்டும் தெளிவு குரு தேவர்களின் தலைவன், சுக்கிரன் அசுரர்களின் தலைவன். தேவாசுரப் போராட்டம் (ஆரி யர்  திராவிடர் போராட்டம்) கிரகங்களுக்குள்ளும் நடை பெற்றுள்ளதாம்.

ஆரியராவது, திராவிட ரா வது என்போர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

4.1.  2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...