மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் குறித்து தினமணி சாங்கோபாங்கமாக செய்தி வெளியிட்டுள்ளது.
மீனாட்சி, சுந்தரேசுவரரின் பிரதிநிதிகளாக செந்தில்பட்டர், ரமேஷ் பட்டர் ஆகியோருக்குக் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பவளக் கனிவாய் பெருமாளின் பிரதிநிதியான சிவாச்சாரியார், மீனாட்சியைத் தாரை வார்த்துக் கொடுத்தார் (கடவுளிடத்திலும் கல்யாணத்தில் பெண்களைத் தாரை வார்க்கும் அடிமைத்தனம் இருந்திருக்கிறது) சுந்தரேசுவரரின் பிரதிநிதியாக செந்தில்பட்டரும், மீனாட்சி யம்மனின் பிரதிநிதியான ரமேஷ் பட்டரும் மணக்கோலத்தில் இருந்து (ஆம்பளையும், ஆம்பளையும் மணமக்களாக வேடம் அணிந்து) மாலை மாற்றிக் கொண்டனர்.
பின்னர் சுந்தரேசுவரரின் பிரதிநிதியும், மீனாட்சியம்மனின் பிரதிநிதியும் சேர்ந்து அம்மனுக்குக் காலை
9.43 மணிக்கு தங்கத்தாலான திருமாங்கல்யத்தைச் சூட்டினர். இதுதான் தினமணியின் வருணனை! (Running Commentry).
கொஞ்சம்கூட கூச்சநாச்சமில்லாமல், சுந்தரேசுவரரின் பிரதிநிதியாக ஒரு பார்ப்பனப் பட்டரும் (ஆணும்), மீனாட்சியின் பிரதிநிதியான இன்னொரு பட்டரும் (ஆணும்) மாலை மாற்றிக் கொண்டனர் என்றால், இது என்ன வெட்கக்கேடு!
ஆணும், ஆணும் எப்படி மாலை மாற்றிக் கொள்ள முடியும்? (எல்லாம் அய்யப்பன் பிறப் புப் பாணிதானோ இதுதான் அர்த்தமுள்ள இந்து மதம்!) ஒரு ஆணும், ஆணும் திருமணம் செய்துகொண்டால், அது சட்டப்படி குற்றமில்லையா?
சுந்தரேசுவரர் குத்துக்கல் லாக பக்கத்தில் உட்கார்ந்திருக்க மீனாட்சிக்கு ஒரு தடிப் பார்ப்பான் தாலி கட்டுகிறான் என்றால், இதைவிட மானக்கேடு வேறு உண்டோ!
சின்ன வயதில் ஆடிய புரு ஷன்
பெண்ஜாதி மண்பொம்மை விளையாட்டு, பெரியவர்களாக ஆன பிறகும் இந்த மனிதர்களை விட்டுப் போகவில்லையோ!
கடவுள் என்கிற பெயரில் இந்த மனுஷர்கள் தங்கள் சமாச் சாரங்களையே கடவுளின்மீது ஏற்றி (God created man in his own image) கல்யாணம், பள்ளியறை, குழந்தைப் பேறு என்று சடங்காச்சாரங்களாக ஆக்கியுள்ளனர் என்பதை இந்த சுந்தரேசுவரர்
மீனாட்சி கல்யாண தெருக்கூத்தைப் பார்க்கும் பொழுது புரியவில்லையா?
பிட்டுக்கு மண் சுமந்தார், மதுரை தமிழ்ச் சங்கத்தில் அமர்ந்து ஆய்வு செய்தான் சிவன் என்றெல்லாம், இந்தக் கடவுள்கள் நடமாடியதுபோல எழுதி வைத்துள்ளார்களே, அவை உண்மை என்றால், மீனாட்சி
சுந்தரேசுவரர் திருக் கல்யாணம் அவர்கள் நிஜமாகவே நடமாடும் நிலையில், நேரில் வந்து, அவர்களே மாலை மாற்றிக் கொள்வது, தாலிக் கட் டிக்கொள்வது என்கிற முறையில் அல்லவா அமைந்திருக்கவேண்டும்?
அப்படி நடக்கவில்லையே ஏன்?
அவை எல்லாம் உண்மையில்லை; கற்பனைச் சமாச்சாரங்கள் அதனால் நடக்கவில்லை என்பது இன்னும் புரியவில் லையா? பார்ப்பான் உண்டு கொழுக்கத்தான் இந்தத் திருவிழா சமாச்சாரங்கள் என்பது விளங்கவில்லையா!
20.4.2008 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக