ஞாயிறு, 16 ஜூலை, 2017

பூணூல்




நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் சங்கர நாராயணப் பெருமாளுக்கு ஜெயேந்திரர் 3 அடி நீளமுள்ள 288 கிராம் எடையில் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கப் பூணூல் அணிவித்தாராம்.
இது இப்பொழுது மட்டுமல்ல, திருப்பதி ஏழுமலையானுக்கே 3 கிலோ தங்கத்தில் பூணூல் அணிவித்தார் (5.4.2002).

கடவுளுக்கே பூணூலா? ஆச்சரியமாக இருக்கிறதா!

இதன் பொருள் என்ன? பக்தியுள்ளவர்கள் கூட கொஞ்சம் புத்தியைச் செலுத்தினால் மிகமிக எளிதில் புரிந்துகொள்ளலாம்.

கடவுளும், பார்ப்பனர்களும் ஒரே ஜாதி; இன்னும் சொல்லப்போனால், கடவுளுக்கும்மேலே பிராமணர்கள் என்பதுதான் அவர்களின் நினைப்பும், ஏற்பாடுகளும் ஆகும்.

தமிழ்நாடு பார்ப்பனர்கள் சங்கம் வெளியிட்ட அந்தணர் ஆற்றிய அருந்தொண்டு என்னும் நூலினை வெளியிட்ட ஜெயேந்திர சரஸ்வதி கடவுளுக்கும்மேலே பிராமணர்கள் என்று சொன்னதை நினைவு கூர்ந்தால் இதன் உண்மை புரியும்.

இவர் மட்டுமல்ல, அவர்களின் வேதங்களும் அதனைத்தான் குறிப்பிடுகின்றன.
தேவாதீனம் ஜெகத்சர்வம்
மந்த்ரா தீனம் ததேவதா
தன் மந்த்ரம் பிரம்மாதீனம்
பிராமண மம தேவதா
(ரிக், 62 ஆவது பிரிவு 10 ஆம் சுலோகம்)
இதன் பொருள்:

உலகம் தேவர்களுக்குக் கட்டுப்பட்டது; தேவர்கள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். மந்திரம் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டது. பிராமணர்களே நமக்குக் கடவுள் ஆவர்.

இந்து மதத்தைப் பொருத்தவரை எல்லா ஏற்பாடுகளுமே பார்ப்பனர்களை முதன்மைப்படுத்துவதேயாகும்.

பூணூல் அணிவது அவர்கள் இரு பிறவியாளர்கள் என்பதற்கு அடையாளம். பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள் என்று பறைசாற்றுவதாகும்.

சூத்திரர்கள் பூணூல் அணிவது மனுதர்மப்படி தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

சூத்திரன் பிராமண ஜாதிக்குறியை  பூணூல் முதலியதைத் தரித்தால், அரசன் சூத்திரனின் அங்கங்களை வெட்டவேண்டும் (மனுதர்மம் அத்தியாயம் 9; சுலோகம் 224).

கடவுளுக்கும் பூணூல் போடுவதன் தாத்பர்யம் இப்பொழுது விளங்குகிறதா?

30.10.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2) 

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...