ஞாயிறு, 16 ஜூலை, 2017

பிரதோஷம்




பிரதோஷம் பிரதோஷம் என்று ஆன்மிகத்தில் சொல்கிறார்களே, அது எத்தனைப் பக்தர்களுக்குத் தெரியும்?

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தார்களாம். (பால் கடல் எங்கிருக்கிறது புவியியல் படித்த மேதாவிகள் கொஞ்சம் சொல்லக்கூடாதா?).

பாற்கடலை எதைக் கொண்டு கடைந்தார்களாம். மந்தாரமலையைக் கொண்டாம். அதற்குப் பயன்படுத்திய கயிறு வாசுகி என்னும் பாம்பாம்.

சிவபெருமான் அனுமதி பெறாமல் கடைந்ததால் பாம்பு விஷம் கக்கிற்றாம். முப்பத்து முக்கோடி தேவர்களும், விஷ்ணு, பிரம்மா உள்பட அனைவரும் சிவனை சரண் அடைந்தார்களாம். நந்தி பகவானை அழைத்து அந்த நஞ்சைக் கொண்டு வருமாறு சிவன் கட்டளையிட்டானாம்.

கொண்டு வரப்பட்ட அந்த நஞ்சை சிவன் லபக்கென்று விழுங்கினானாம். பார்வதி தேவியாகிய சிவனின் பாரியாள், விஷம் கீழே இறங்காமல் இருக்க தொண்டையை லபக்கென்று பிடித்தாளாம். விஷம் இறங்கியதால் சிவன் நீலகண்டன் என்று பெயர் பெற்றானாம்.

விஷம் அருந்திய சிவன் மூர்ச்சையானானாம். (சிவன் சக்தி இவ்வளவுதானா?) அப்பொழுது நந்தீஸ்வரன் (காளை) சிவனைத் தொழுது மூர்ச்சை தெளிய வைத்தானாம்.

சிவன் விழித்த இந்தக் காலம்தான் பிரதோஷ காலமாம். அமாவாசை மற்றும் பவுர்ணமிக்குப் பிறகு வரும் 13 ஆம் நாள்தான் பிரதோஷமாம். மாலை 4.30 மணிமுதல் 7.30 மணிவரை உள்ள அந்த நேரத்தில் சிவனைத் தொழுதால் கடன், வறுமை, துர்மரணம், செய்த பாவங்கள் எல்லாம் பறந்தோடி விடுமாம். சிவனுக்கு உதவி புரிந்த நந்திக்கும் அபிஷேகம் செய்யவேண்டுமாம்.

இந்த விரதத்தை சித்திரை, வைகாசி, அய்ப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் சனிக்கிழமையன்று பிரதோஷ வேளையில் ஆரம்பிப்பது மிகச் சிறப்பாம்.

சிவதரிசனம் செய்த பிறகு உணவு உண்ணவேண்டும். தொடர்ந்து 12 ஆண்டுகள் (300 தடவை) இந்தப் பூஜை செய்தால், ராஜாங்க சிம்மாசனப் பதவி கிடைக்குமாம். (அமைச்சர்கள் ஆக விரும்புபவர்கள் கவனிக்க).

இந்தக் கதை கடுகத்தனை அளவாவது அறிவுக்குப் பொருந்துகிறதா? சிவன் அனுமதி பெறாததால்தான் நஞ்சு வந்தது என்பதை, விஷ்ணு உள்ளிட்டோர் சிவனை வேண்டிக்கொண்டனர் என்பதையும் வைஷ்ணவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

எந்தப் பாவமும் நீங்குமாம். தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பானுக்கு சிவன் மோட்சம் கொடுத்தானாம். (திருவிளையாடல் புராணம்  மாபாதகம் தீர்த்த படலம்).

இந்தக் கேடுகெட்ட அருவருப்பான பக்தித் துர்நாற்றத்தை என்னென்று தான் சொல்லுவதோ! திருநீறு அணிந்தால் தாயைப் புணர்ந்த பாவமும் போகும் என்று சொல்லுவோரை லாடம் கட்டி அடிக்கவேண்டாமா? சிந்திப்பீர்!

31.10.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...