ஞாயிறு, 16 ஜூலை, 2017

கரிசனமோ!


மத்திய அரசின் சிறுபான்மையினர் சலுகைகள் தொடர்ந்தால் அரசியல் சாசனம் சமூகநீதிக்காகத் தந்துள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகைகள் பயனற்றதாகிவிடும் -(தினமலர், 4.4. 2010)

திருவாய் மலர்ந்து அருளி இருப்பவர் இந்து முன்னணிப் பிரமுகர் திருவாளர் இராமகோபாலவாள்.

அடேயப்பா! சமூகநீதியில்தான் எவ்வளவு பெரிய உயரமான கரிசனம்! அதுவும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மீதான கரி-சனமோ, கரிசனம்!!

அது சரி, பிற்படுத்தப்பட்டோருக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் ஒதுக்கீட்டுப் பிரச்சினை தலையெடுத்தபோதெல்லாம் இந்தத் தாண்டவராயர்கள் எந்தக் கோயில்களுக்கு முன் தண்டால் எடுத்துக் கிடந்தார்களாம்?

50 சதவிகிதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்று உச்சநீதி மன்றம் தடாலடியாக கூறியபோது இந்தக் குடுமிகள் கோபங்கொண்டு கூத்தாடவில்லையே, ஏன்?

மண்டல் குழுப் பரிந்துரைகளை அமல்படுத்தக் கூடாது என பார்ப்பனர்கள் உண்ணாவிரதம் இருக்க முயன்றபோது இந்தக் காவிக் கூட்டம் கவ்சனம் கட்டிப் போராட முன்வந்திருக்கலாமே!

அப்பொழுதெல்லாம் சமூகநீதிக்காகப் போராட முன்வராத நிலையில், சிறுபான்மை யினரான முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு என்று வரும்போது, வயிற்றிலும், வாயிலும் வாங் வாங்கென்று அடித்துக்கொண்டு பிலாக்கணம் பாடுவது ஏன்?

சிறுபான்மையினர் என்றால் அப்படி ஒரு இனம் தெரியாத வெறுப்பு!

பிளவுகளும், பிளவுகளின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகளும் அவற்றின் அடிப்படையில் கூடுதல் வாய்ப்புகளையும், வசதிகளையும் வயிறு முட்ட அனுபவித்துக் கொண்டிருந்த ஒரு கூட்டம், வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் உயர்வு காணத் துடிக்கின்றனர். நோய்க்கிருமிகளிடமிருந்தே நோய்த் தடுப்பு மருந்துகளை உருவாக்குவது போல  சிறுபான்மையினருக்கும் சேர்த்து இட ஒதுக்கீடு என்ற உரிமை முழக்கம் கிளம்பியுள்ளது.

நியாயமாக இராமகோபாலன்கள் என்ன குரல் கொடுக்கவேண்டும்சிறுபான்மையினருக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதால், இட ஒதுக்கீட்டு அளவை அந்தந்த மாநிலங்களே பார்த்துக் கொள்ளும் உரிமைக்காக அல்லவா குரல் கொடுக்க வேண்-டும்!

கொடுக்குமா, கொழுக்கட்டையில் வடக்கு தெற்கு பார்க்கும் கூட்டம்?!

6.4. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 3,


ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...