ஞாயிறு, 16 ஜூலை, 2017

16 ஆவது திருமணமாம்!





உத்தரப்பிரதேச மாநிலம் ஜோதிபா புலே மாவட்டம் ராய்ப்பூர் கலன் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் வாகித் என்பவர் கடந்த 40 ஆண்டுகளில் 15 திருமணங்களைச் செய்துகொண்டு இப்பொழுது 16 ஆவது திருமணத்திற்கும் அடி போடுகிறாராம். என்ன காரணமாம்? இதுவரை ஒரு குழந்தைகூடப் பிறக்கவில்லையாம்; அதற்காகத்தான் 16 ஆவது திருமண ஏற்பாடாம்.

ஒரு அப்துல் வாகித் மட்டுமல்ல; இதுபோல எத்தனையோ வாகித்துகளும், வாஞ்சிநாதர்களும் நாட்டிலே இருக்கவே செய்கிறார்கள். குழந்தைகள் இல்லையென்றால் அதற்குப் பெண்கள்தான் காரணம் என்கிற அறியாமை, ஆண்களுக்கே உரிய ஓர் அகம்பாவம் இந்த நாட்டிலே தலை கொழுத்துக் காணப்படுகிறது.

15 பெண்களைத் திருமணம் செய்தும் குழந்தை இல்லையென்றால், கண்டிப்பாக குறைபாடு இந்த ஆணிடம்தான் இருக்கிறது என்பது வெளிப்படை; இதனை அந்த ஆசாமியிடம் சுட்டிக்காட்டி இடித்துக் கூற எந்த பகுத்தறிவுவாதியும் அல்லது பொது அறிவுவாதியும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இல்லை போலும்.

திருமணத்துக்குமுன் மருத்துவ சோதனை ஆண்  பெண் இருபாலரிடத்திலும் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கருத்தினை தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தொடர்ந்து திருமண மேடைகளில் சொல்லிக் கொண்டு வருகிறார்.

ஜாதகப் பொருத்தம் என்பது பொய்; குருதிப் பொருத்தமே தேவை என்பது பகுத்தறிவு  அறிவியலின் நிலைப்பாடாகும்.

இந்த நாட்டில் சோதிடப் பலன்களையும், ராசிப் பலன்களையும் பக்கம் பக்கமாக எழுதும் ஏடுகள், இதழ்கள் மக்களுக்குத் தேவையான இதுபற்றியெல்லாம் எழுதாதது  அவற்றின் பொறுப்பற்ற தன்மையையும், பகுத்தறிவற்ற நிலையையும் தான் படம் பிடித்துக் காட்டும்.

மக்கள் கலையரசி மனோரமா திருமணத்துக்குமுன் மருத்துவ சோதனை என்று வலியுறுத்துவது வரவேற்கத்தக்கதாகும். கலை உலகினர் எடுத்துக் கூறினால் மக்களிடத்திலே வேகமாகச் சென்றடையும்தானே!

இன்னொரு மூட நம்பிக்கை உண்டு. குழந்தை ஆணா, பெண்ணா என்று முடிவு செய்வது ஆண்களின் குரோமோசோம்கள்தான். இந்த அறிவியல் உண்மை தெரியாத நிலையில், ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக அடுத்தடுத்து திருமணம் செய்துகொள்ளும் மூடர்களை என் சொல்ல!

11.11.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...