தோழர்களே! நான்
தமிழர்கள் என்பது பற்றிப் பேசுவது, திராவிடர்கள் என்பது பற்றியேயாகும்.
திராவிடம் என்றாலும் தமிழ்நாடு என்றாலும் ஒன்றுதான்! இது சரித்திர
ஆராய்ச்சிக்காரர் முடிவாகும். திராவிடம் என்கின்ற பேச்சே தமிழ் வார்த்தையாகும்.
எப்படி எனில், திரு இடம் என்பதுதான் திருவிடமாகி,
திராவிடம் என்பதாக ஆகிவிட்டது. தமிழர்கள் திரு
என்கின்ற வார்த்தையை ஒரு மேன்மை அணியாக ஒவ்வொன்றுக்கும் உபயோகிப்பது வழக்கம்.
வடவர்கள் எப்படி
ஸ்ரீ என்பதை ஒவ்வொரு வார்த்தைக்கும் முன்னால் உபயோகிக்கிறார்களோ அதுபோல்
தென்னவர்கள் திரு என்பதை உபயோகிக்கிறார்கள். திருப்பதியைத் திருமலை என்கிறோம்.
ஆரூரைத் திருவாரூர் என்கிறோம்; ஐயாறை திருவையாறு என்கிறோம். அதுபோல்
தமிழர் வாழ் இடம் முழுமையும் திருஇடம் - திருவிடம் என்கிறோம். இது வடமொழி
உச்சரிப்பால் திராவிடமாகிவிட்டது. தமிழ் என்றால் இனிமை; இனிமைக்கு மேன்மை தருவது இயற்கையல்லவா! ஆதலால், நான் யோசித்தவரை இதைத்தவிர திராவிடம் என்கின்ற வார்த்தைக்குக் காரணம்
எனக்குத் தோன்றவில்லை.
நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு
ஆசிரியர் : தந்தை பெரியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக