வியாழன், 3 ஆகஸ்ட், 2017

மின்னஞ்சல்!


தொலைக்காட்சி என்பது அறிவியலின் நன்கொடை என்றாலும், அந்த அறிவியல் கருவியைப் பயன்படுத்தி எப்படி அறிவியலுக்கு விரோதமான மதப் பிரச்சாரத்தையும், மூடநம்பிக்கைகளையும் மக்கள் மத்தியில் பரப்புகிறார்களோ, அதே போல மின்னஞ்சல் () என்னும் ஊடகத்தைப் பயன்படுத்திப் பார்ப்பனர்கள் தங்கள் கலாச்சாரப் பரிவர்த்தனை களை மின்னல் வேகத்தில் செய்து கொண்டு இருக்கின்றனர்.

எதனால் நல்ல பலன் கிட்டும் என்று நினைக்கிறார்களோ, அதனை விரைவாகச் சென்று கைப்பற்றி, தங்கள் மயமாக ஆக்கிக் கொண்டு பார்ப்பனீயத்தைப் பல்லக்கில் ஏற்றி ஊர்வலம் வரச் செய்வது அவர்களின் நுட்பமான அணுகுமுறை.

இப்பொழுது மக்கள் தொகைக் கணக்கு எடுக்கப்படுகிறது அல்லவா? இதில் ஒரு பார்ப்பனரின் மூளை எப்படி வேலை செய்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தையடுத்த புனவாசலைச் சேர்ந்த பசுசேஷாத்திரி ராகவன் (அர்ஷா வித்திய குருகுலம் என்கிற அமைப்பின் நிறுவனர்) மின்னஞ்சல் மூலம் ஒரு தகவலைப் பார்ப்பனர்களுக்கு மட்டும் பரப்பிக் கொண்டு திரிகிறார்.

நாடு முழுக்கத் தொடங்கியிருக்கும் மக்கள் தொகைக் கணக் கெடுப்பின்போது தாய் மொழி என்ற இடத்தில் மறக்காமல் சமஸ்கிருதத்தைக் குறிப்பிடுங்கள்; அல்லது குறைந்த பட்சம் இரண்டாம் மொழி என்னும் இடத்திலாவது சமஸ்கிருதம் என்று கட்டாயம் சொல்லுங்கள். சமஸ்கிருதம் தான் அனைத்து மொழிகளுக்கும் அடிப்படை. இந்தியாவின் பன்முகக் கலாச்சாரத்தை ஒற்றுமைப்படுத்துவது சமஸ்கிருதமே! அதனைப் புறக்கணிப்பது நம் கலாச்சாரத்தை நாமே அழித்துக் கொள்வதாகும்.

சமஸ்கிருதத்தை அதிகமான பேர்கள் தாய்மொழியெனக் குறிப்பிடுவதன்மூலம் மத்திய அரசிடமிருந்து சமஸ்கிருத வளர்ச்சிக்குப் பல சலுகைகளைப் பெறமுடியும். அரசுத் தொலைக்காட்சியில் (தூர்தர்ஷன்) அதிகநேரம் ஒதுக்கிட வாய்ப்புக் கிடைக்கும். இந்த அரிய வாய்ப்பை நம்மளவாள் இழந்து விடக்கூடாது என்று அந்த மின்னஞ்சலிலே தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்ப்பனர்களின் முகவரிகளுக்கு மட்டுமே அனுப்பப்பட்ட இந்த மின்னஞ்சல் தவறிப் போய் தமிழின உணர்வாளர் ஒருவருக்கு வந்து விட்டதால்தான் இந்தக் குட்டு உடைபட்டு விட்டது. பார்ப்பனர்களும் தமிழர்கள்தான் என்று பிதற்றும் தமிழர்களே! இதற்குப் பின்னாலும் அப்படிக் கூறலாமா? ஒரு கணம் சிந்திப்பீர்!

28.2.2011

நூல் :  விடுதலை ஒற்றைப் பத்தி - 4

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...