தொழிலாளி என்று ஒரு கூட்டம் ஏன் இருக்க வேண்டும்? முதலாளி என்று ஒரு கூட்டம் ஏன் இருக்க வேண்டும்? இது யாருடையக் கட்டளை? என்ன அவசியத்தைப் பொறுத்தது? என்று அவர்களை நாம் முதலில் கேட்கிறோம்.
பிறகு பாடுபடுபவன், சோம்பேறி, கஷ்டப்படுபவன், சுகப்படுபவன், வேலை செய்பவன், வேலையின் பயனை அனுபவிப்பவன், ஏமாறுகிறவன், ஏமாற்றுபவன் என்பன போன்ற பிரிவுகள் மனித வாழ்க்கையில் இருக்கும் படியாகவே வாழ்க்கைத் திட்டத்தை வகுக்க வேண்டும் என்பதற்கு ஏதாவது அவசியமும் ஆதாரமுமுண்டா? என்பது நமது கேள்வியாகும்.
- குடிஅரசு, தலையங்கம், 14.12.1930
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக