பிராமண துவேத்தால் பிராமண தத்துவத்திற்கு கெடுதி வரும் போலிருக்கின்றது என்று மிக்க துக்கப்படுகிறார்.
பிராமணத்துவம் என்றால் என்ன? ஊரை ஏமாற்றுவதா? உத்தியோகங்களெல்லாம் எந்த வேலை செய்தாவது தாங்களே பார்க்க வேண்டுமென்பதா? தங்கள் சுயநலத்துக்காக நாட்டைக் காட்டிக் கொடுப்பதா? அரசாங்கத்துக்கு உளவாய் வேலை செய்வதா? போலீசு வேலை பார்ப்பதா?
லஞ்சம் வாங்குவதா? அதிகாரிகளின் தயவுக்காக இழிதொழிலில் இறங்குவதா? எல்லாவித அயோக்கியத்தனங்களையும் இழி தொழிலையும் செய்து கொண்டும் உடம்பினால் ஒரு தொழிலும் செய்யாமல் பிச்சையயடுத்து வயிறு வளர்த்துக் கொண்டும் சோம்பேறி வர்க்கமாய்த் திரிந்து கொண்டும் பிராமணன் உயர்ந்தவன் என்று சொல்லுவதா? பார்ப்பனரல்லாதாரைத் தலையயடுக்கவொட்டாமல் மதத்தின் பேராலும் சாமி பேராலும் அரசியலின் பேராலும் அழுத்தி வைத்திருப்பதா? இவற்றில் எந்தக் காரியம் கெட்டுப் போகும் என்று திரு. அய்யங்கார் வருத்தப்படுகிறார் என்பது நமக்கு விளங்கவில்லை.
- குடிஅரசு, தலையங்கம், 05.08.1928
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக