இந்த நாடு யாருடையது? இந்த நாட்டுப் பழங்குடி மக்கள் யார்? திவான் பகதூர் கிருஷ்ணய்யருக்கோ அவருடைய இனத்தாருக்கோ இந்த நாட்டில் சொந்தமென்ன? அவருக்கு இந்த நாட்டில் அந்தஸ்து என்ன? அவர் இந்த நாட்டாரானால் அவர் எப்படி பிராமணராவார்? பறையனை விட "சூத்திரனை' விட இவர் எப்படி உயர்ந்த பிறவி ஆவார்? இவர் தன்னை உயர்ந்த ஜாதி என்றும், புத்திசாலி ஜாதி என்றும் சொல்லிக் கொள்ள அவருக்கு உரிமை எப்படி வந்தது?
- குடிஅரசு, தலையங்கம், 27.01.1945
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக