100க்கு 3 பேராயிருக்கும் பார்ப்பனர்களில் 100க்கு 50 பேர் மோசடி செய்திருக்கிறார்கள். திருடியிருக்கிறார்கள். அயோக்கியத்தனம் செய்திருக்கிறார்கள் .இப்படியயல்லாம் நடந்திருக்கிறார்கள். அப்படியிருந்தும், 100க்கு 10, 20 பேர் குற்றம் செய்தார்கள் என்பதற்காக ஒரு ஜாதியையே குற்ற பரம்பரையினர் என்று சொல்லுவது சரியா? நீதியா? என்பது போலத்தானே பார்ப்பனர்களின் யோக்கியதையை வெளிப்படுத்தியிருக்கிறோம்.
அது எப்படிப் பார்ப்பனரைத் திட்டுவதாகும்? மறுக்க முடியாத வகையில் அயோக்கியன் என்று முடிவு கட்டப்பட்ட ஒருவனை, அவனைத் தெரிந்து கொள்ளாத மற்றவர்களிடம், இவன் இப்படி யயல்லாம் அயோக்கியன் என்று முடிவு செய்யப்பட்டவன். முடியுமானால் பழகாதீர்கள். இல்லாவிட்டால் ஜாக்கிரதையாய்ப் பழகுங்கள்' என்று கூறுவதா அயோக்கியனைத் திட்டுவதாகும்?
- குடிஅரசு, தலையங்கம், 14.05.1949
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக