செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

திராவிட நாட்டின் எல்லை - சரித்திரம் கூறும் உண்மை

திராவிடர் என்பது நாட்டைப் பொறுத்தே ஏற்பட்ட பெயராகும். ஒவ்வொரு மக்களுக்கும் நாட்டைப் பொறுத்தும் மொழியைப் பொறுத்தும்தான் பெயர் வருகிறது. மலையாளிகளுக்கு மலைப்பாங்கைப் பொறுத்தே அந்தப் பெயர் வந்தது. இந்த முறையில் பார்த்தோமானால், திராவிட நாடு, தமிழ்நாடு என்பது மேன்மையையும், இனிமையையும் பொறுத்தே ஏற்பட்ட பெயராகும். 

ஆனால், நம் திராவிட நாடானது நாம் இன்று கூறும் எல்லையை மாத்திரம் கொண்டதல்ல! இட்லர் சொல்லுகிறபடி நாட்டு எல்லை, கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டதல்ல, மக்களால் சிருஷ்டிக்கப்படுவது

திராவிட மக்கள் ஒரு காலத்தில், திராவிட நாட்டு விஸ்தீரணமாக இன்றைய இந்தியா முழுவதையும் கொண்டு இருந்தார்கள். திராவிட நாட்டுக்கு வட எல்லை இமயமலை! மற்ற மூன்று புறத்து எல்லை பெரிதும் சமுத்திரம்!! இப்படி இருந்ததற்கு ஆதாரம், *இதோ பாருங்கள், இந்த இந்திய சரித்திர பூகோள படப்புத்தகத்தில்!! இன்றுள்ள இந்தியா படத்தைப் போட்டு இதற்குத் திராவிடம் என்ற பெயர் கொடுத்திருக்கிறார்கள்!! இது கிறிஸ்து பிறப்பதற்கு 2,500 வருஷங்களுக்கு முன் வரையில் இருந்து வந்த பெயராகும்.

சரித்திரக்காரர்கள் இன்றைக்கு 8,000 வருடத்துக் காலம்வரைதான் சரித்திரம் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதில் கிறிஸ்து பிறப்பதற்கு 2000 வருடத்துக்கு முன் முதல் கி.மு. 6000 வருடம்வரை கண்டுபிடித்த சரித்திரப்படி, இந்தியா திராவிட நாடாக இருந்திருக்கிறது. இதில் இருந்த மக்கள் திராவிடர்களாகவே இருந்திருக்கிறார்கள். இதே ஆராச்சியாளர் குறிப்புப் பாருங்கள், மற்றும் ஹரப்பா மகஞ்சோதாரோ முதலிய இடங்களில் ஏற்பட்ட, புதிய கண்டு பிடிப்புகள் மூலமும், இந்தியா முழுவதும் திராவிட எல்லைக்கு உள்பட்ட விஸ்தீரணம் என்பது கல்லுப்போல் உறுதியாகிவிட்டது. நூல்-தந்தை பெரியார்)


நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு 

ஆசிரியர் : தந்தை பெரியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...