வாலிபப் பெரியார் என்று போற்றப் பெற்ற ஏ.வி.பி.
ஆசைத்தம்பியின் நினைவு நாள் இன்று (7.4.1979)
மாணவப் பருவத்திலேயே சுயமரியாதை இயக்கக் கருத்துகளிலே ஈடுபாடு கொண்டு - தந்தை பெரியாரைச் சுற்றியே தம் சிந்தனைகளை வளப்படுத்திக் கொண்டவர். இவரின் தந்தையார் பழனியப்பனார் சுயமரியாதைச் சுடரொளியாவார்!
திராவிடர் கழகத்தை விட்டு தி.மு.க.வுக்கு அவர் சென்றிருந்த காலகட்டத்தில்கூட எந்த நிலையிலும் தன்மான, பகுத்தறிவுக் கருத்துகளை விட்டுக் கொடுக்காதவர்; கடவுள் இல்லை;
இல்லவே இல்லை என்பதில் மிகவும் அழுத்தமானவர்.
மக்களவையில் தி.மு.க.
சார்பில் ஒரே ஒரு உறுப்பினரான காலத்திலும்கூட தனித்தன்மையான பகுத்தறிவு வீரராகக் கர்ச்சனை செய்தார்.
காந்தியார் சாந்தி அடைய என்ற அவரின் நூல் அன்றைய காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்டது; அவரும் சிறை பிடிக்கப்பட்டார்; சிறையில் மொட்டையும் அடிக்கப்பட்டார்!
தனித்தன்மை வாய்ந்த எழுத்தாளர்! தனியரசு எனும் இதழை நடத்தினார்.
திரைப்படங்களுக்கும் உரையாடல் எழுதி இருக்கிறார்.
அன்னை மணியம்மையார் அவர்களால் 1974 திசம்பரில் அய்யா நினைவு நாளையொட்டி நடத்தப்பட்ட இராவண லீலா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கர்ச்சனை செய்தார்.
நெருக்கடி நிலை காலத்தில் மிசா கைதியாகச் சென்னை சிறையில் இருந்த நேரத்தில் பெரும்பாலும் திராவிடர் கழகத் தோழர்களுடனேயே நேரத்தைக் கழித்தார்.
அரசியலுக்குச் சென்றதால் பகுத்தறிவுக் கருத்துகளை இளைஞர்கள் மத்தியில் எடுத்துச் சொல்லும் கடமையிலிருந்து தவறிவிட்டோம் என்று வெளிப்படையாகக் கூறக் கூடியவர்.
விடுதலை ஒற்றைப்பத்தி - 1,
7.4.2000
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக