"உங்களுக்குத் தகுதி இல்லை, திறமை இல்லை, நீங்கள் அடிமை வேலைக்குத்தான் தகுதி' என்று சொல்லவுமான நிலை எதனால் - எது எதனால் ஏற்பட்டதோ அதை அதையயல்லாம் - அவைகளையயல்லாம் வேரோடு கண்டுபிடித்து அழித்து ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் கிளர்ச்சி தோன்றியதாகும்.
1939-ல் இந்திக் கிளர்ச்சி தோன்றிய காலத்தில் இம்மாகாணத்தில் பார்ப்பன ஆதிக்கம் இருந்த நிலை என்ன? அப்போது ஆச்சாரியார் - சி.ஆர். அவர்கள் முடிசூடா மன்னராக இருந்தார். "திராவிட மக்களை இப்படிக் கொடுமைப்படுத்தலாமா?' என்று கேட்டதற்கு அவர், "நடு இரவில் திருடன் புகுந்து விட்டால் கையில் கிடைத்ததை எடுத்து அடிக்க வேண்டியதுதானே! என்றார். அந்த ஆணவச் சொல்லானது தமிழுக்கு எவ்வளவோ ஆக்கத்தைக் கொடுத்தது. தமிழர்களை ஒரு அளவுக்காவது பார்ப்பனச் சூழ்ச்சியை உணரச் செய்து, நல்ல அளவுக்குப் பார்ப்பன வெறுப்பை உண்டாக்கிற்று. அதனால் மந்திரி சபையில் அவர்களுக்கு மரியாதையே இல்லாமல் செய்து விட்டது. கடைசியாக, அந்த ஒரு காரணமே ஆச்சாரியாருக்கு இந்த நாட்டில் மரியாதையுடன், பெருமையுடன் வாழ இடமே இல்லாமல் போய் விட்டது.
- விடுதலை, 14.08.1950
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக