நம்மவன் பெரிய முதலாளியாக இருந்தாலும் அவன் காப்பி கடை கதவன்டை போய் வெளியே நின்று கொண்டு சாமி! சாமி! என்று கையை ஏந்திக் கொண்டு ஆருத்திரா தரிசனத்தில் விபூதி வாங்குவதுபோல் கத்துகிறான். இந்த முதலாளியின் டிரைவர் நேராக உள்ளே போய் சூடாக இட்லி தின்றுவிட்டு போகிறான். எப்பொழுது நம்முடைய நிலை உயர்வது? எப்போது நம் சுயமரியாதை காப்பாற்றப்படுவது? அவர்களுக்கு இந்த மாதிரி கஷ்டம் உண்டா? ஆகவே பார்ப்பன சுயராஜ்ஜியமும், நம் சுயராஜ்ஜியமும் ஒன்றாய் இருக்க முடியுமா?
- குடிஅரசு, சொற்பொழிவு, 18.10.1936
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக