சில பிராமணரல்லாதாரும், அக்ராசனாதிபதியுந்தான் பிராமணர்களைத் திட்டுகிறார்களா? அல்லது தேசமே அவர்களைத் திட்டுகிறதா வென்பதை இவர்கள் கவனிக்க வேண்டும். இந்தியாவிற்கே அருந்தனமாய் மதிக்கப்படுபவரும், உலகப் பெரியாருமான மகாத்மா காந்தி இந்தப் பிராமணர்களைப் பற்றி சொல்லும்போது இந்தியாவுக்கு பிரிட்டிஷார் செய்த அக்கிரமத்தை விட நமது பிராமணர்கள் செய்தது குறைந்ததல்ல வென்று சொல்லியிருக்கிறார். ஸ்வாமி விவேகாநந்தர், பிராமணர்கள் கக்கின வித்தால்தான் இந்தியா கெட்டதென்றும், அவர்கள் வித்தைத் திரும்ப அவர்களே தான் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், அந்தப் பிராமண விம் எடுபட்டாலல்லாது. இந்தியாவுக்கு விடுதலையில்லையயன்றும், சொல்லியிருக்கிறார்.
பெரிய தியாகியும் தேசபக்தருமான தேசபந்து தாஸ் அவர்கள், தனக்கு அதிகாரமிருந்தால் பிராமண ஸ்திரிகளையயல்லாம் பிடித்து, தீண்டாதவர்களுக்கு ஒப்புவித்து விடுவேன் என்று தனக்கு அவர்கள் மீதுள்ள ஆத்திரத்தைக் காட்டியிருக்கிறார். இந்தியரி´யான ஸர்.பி.ஸி. ரே அவர்கள், இந்தியாவுக்கு சுயராஜ்யம் வேண்டுமானால், பிராமணர்களையயல்லாம் மூட்டையில் போட்டுக் கட்டி அத்லாந்திக் மகா சமுத்திரத்தில் போட்டுவிட வேண்டுமென்று சொல்லியிருக்கிறார். இவை யயல்லாம் புகழுரைகளா? இன்னும் இந்தப் பிராமணர்களால் மதிக்கப்பட்டவர்களும், மதிக்கப்படுகிறவர்களுமான ஸ்ரீமான்கள் டாக்டர் வரதராஜலு நாயுடு ஈ.வெ. இராமசாமி நாயக்கர், வி. சர்க்கரைச் செட்டியார், சுரேந்திரநாத் ஆரியா, வி.ஓ. சிதம்பரம்பிள்ளை, தண்டபாணி பிள்ளை, எஸ். இராமநாதன், இராமச்சந்திரச் செட்டியார், சுப்பிரமணியநாயினார், இராமசாமி செட்டியார், இராமநுஜ செட்டியார், ஆதிகேசவலு நாயக்கர், சிங்காரவேலு செட்டியார், கந்தசாமி பிள்ளை, சுப்பையா, சாமிநாதஞ் செட்டியார், வெங்கிடகிருஷ்ண பிள்ளை, பவானி சிங், சொக்கலிங்கம் பிள்ளை, வயிசு, ண்முகம் செட்டியார், ராயசொக்கலிங்கம் செட்டியார், தியாகராஜ ஞானியார், சுந்தரம்பிள்ளை, ஹமீத்கான் ஆகிய தேசபக்தர்கள், தேசத்துக்காக ஒரு தடவை இரண்டு தடவை, மூன்று தடவை, நான்கு தடவை சிறைக்குச் சென்றவர்கள். ஒரு வருடம், இரண்டு வருடம், மூன்று வருடம், ஐந்து வருடம் தேசத்துக்காக ஜெயிலுக்குச் சென்றவர்கள், பி.ஏ., எம்.ஏ.பி.எல்., முதலிய பட்டதாரிகள், வைதீக ஒத்துழையாதார், நடுக்கட்சியார், சுயராஜ்யக் கட்சியார் தொழிலை விட்டவர்கள், தங்கள் வரும்படியை விட்டவர்கள் என்று சொல்லப்படும் இவர்களும் இன்னும் அநேக பெரியார்களும், இன்னும் சில ஜில்லா காங்கிரஸ் பிரசிடெண்டுகளும், தாலுகா காங்கிரஸ் தலைவர்களும், காரியதரிசிகளும், நிர்வாக மெம்பர்களும், மாகாண காங்கிரஸ் தலைவர்களும், காரியதரிசிகளும், நிர்வாக மெம்பர்களும், மாகாண ஜில்லா, தாலுகா மகாநாட்டுத் தலைவர்களும், எல்லாரும்தான் இந்தப் பிராமணர்களைத் திட்டுகிறார்கள்.
- குடிஅரசு, 10.09.1949
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக