தமிழர் மதமானது, தமிழன் ஈன ஜாதி, தொடக்கூடாதவன் என்று செய்திருப்பதல்லாமல், வேறு என்ன
செய்திருக்கிறது?
தமிழன் இன்று வணங்கும் கடவுள்கள், தமிழனிடத்திலிருந்தே எல்லாச்
செலவுகளையும், சவுகரியங்களையும் பெற்றுக்கொண்டு, தமிழன் உள்ளே வரக்கூடாது, கிட்ட
வரக்கூடாது, பூசை செய்யக்கூடாது.
தமிழ்மொழியில் தோத்திரம் கூடாது என்று செய்திருக்கிறதல்லாமல் வேறு
என்ன செய்திருக்கிறது? இவைகளை எல்லாம் தமிழ்மக்கள் யோசித்துப் பார்க்க வேண்டாமா? தமிழர் என்ற
தலைப்பில் இதைத்தவிர வேறு என்ன பேசுவது, முந்தைய பெருமையை நினைக்காதே; இன்றைய
இழிவைப்பார், என்ற முதுமொழியைக்
கவனியுங்கள்.
(நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர்
பண்பாடு - தந்தை பெரியார்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக