பள்ளிப்
புத்தகத்தைப் பார்க்கிறோம். ஆரம்பப் பள்ளியின் புத்தகத்தில்
ஒரு படம் இருக்கும். ஒரு
குழந்தை குனிந்து நிற்க, இன்னொரு குழந்தை
முதுகில் ஏறி உறியிலிருந்து வெண்ணெய்
எடுப்பதாகப் படம் இருக்கும்.
கண்ணன்
தின்னும் பண்டம் எது? கண்ணன்
தின்னும் பண்டம் வெண்ணெய் என்பதைக்
கற்றுத் தர இப்படிப் போட்டிருக்கும்.
கைக்கெட்டாத பொருளை எவருக்கும் தெரியாமல்
எப்படி எடுப்பது என்பதைச் சொல்லிக் கொடுக்கும் வகையில் இப்படம் இருக்கிறது.
இப்படி நான் சொல்வதால் புராணம்
கூடாது என்று சொல்வதாக எடுத்துக்
கொள்ளக் கூடாது. அந்தக் கருத்தை
இங்கு சொல்லவில்லை. மாலை 6 மணிக்கு மேல்
பொதுக் கூட்டத்தில் வைத்துக் கொள்கிறேன்.
பள்ளிக்கூடத்துக்
கட்டடத்திற்குப் பக்கத்தில் உள்ள பிறர் வீட்டுத்
தோட்டத்தில் காய்த்துத் தொங்குகிற மாங்கனியைப் பறிக்க சோனிப் பையன்
ஒருவனை குனிய வைத்து மாங்காய்
பறிக்கலாம் என்ற வழியை பிள்ளைகளுக்குச்
சொல்லிக் கொடுப்பதாக ஆகிறது. இந்தக் கருத்தைப்
பகுத்தறிவு என்று எடுத்துக் கொண்டாலும்
சரி, பயப்படாமல் உலக அறிவு என்று
திருத்தி அமைத்தால் கல்வி அறிவும், தரமும்
பெருகும்.
- முதலமைச்சர்
அண்ணா. கல்வி மானியக் கோரிக்கை
விவாதத்திற்குப் பதிலளிக்கையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் 23-.3.-1967 இல் பேசிய
பேச்சின் ஒரு பகுதி இது.
-_ விடுதலை 25.-03.-1967)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக