இந்துமத ஆதாரப்படி, இந்துமத தர்ம சாஸ்திரங்களின் விதிப்படி இத்தொழிலாளிகள் இவ்வளவு பேரையும் உழவர், நெசவர், வாணியர், பல தொழில் தச்சர்கள் உட்பட யாவரையும் வருணாசிரம சாதி முறையில் நாலாம்சாதி சூத்திர சாதியாய் ஆக்கி மற்றும் அதனுள்ளும் கீழ்-மேல் படி வைத்து, ஒருவருக்கொருவர் உண்பன, தின்பன, தொடுதல் - நெருங்குதல் கூட இல்லாமல் இருக்கும்படியான இழிவுகளை உண்டாக்கி - ஒருவரை ஒருவர் இழித்துக் கூறிக்கொள்ளும்படியாகச் செய்துவைத்து, இந்த முறையும்கூட நாட்டுக்கு ஒருவிதமாய் நடப்பிலிருக்கும்படியாக ஆக்கிக் கீழ்மைப்படுத்தி, அவர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் நலனுக்கும், மேன்மைக்கும் முயற்சி செய்ய வழி இல்லாமல் செய்து வைக்கப்பட்டிருக்கிறது.
- விடுதலை, தலையங்கம் - 16.2.1940
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக