ஞாயிறு, 16 ஜூலை, 2017

அக்னி தீர்த்தம்




வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு இராமேசு வரத்தில் நேற்று ஏராள மான பக்தர்கள் அதிகாலை 4 மணிமுதல் அக்னித் தீர்த்தத்தில் தீர்த்தமாடி கடற்கரையில் தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டனராம்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை வருகிறது; பக்தர்கள் தீர்த்தமாடுகின்றனர்; மகாளய அமாவாசை என்று கூறி, அன்று ஏகப் பட்ட அமர்க்களங்கள் நடக்கின்றன.
பெயரக்கேற்ப அது அக்னி (நெருப்பு)த் தீர்த்தமாகவிருந்தால் பக்தர்கள் அதில் நீராட முடியுமா? என்பது ஒருபுறம் இருக்கட்டும்; ஒரு குட்டையில் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் குளித்தால், அதனால் ஏற்படும் சுகாதாரக் கேடு எத்தகையது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டாமா?
இத்தகைய தீர்த்தங்களில் மக்கள் குளித்து எழுந்த பின் அந்தத் தண்ணீரை பரிசோதனை செய்து பார்த்ததுண்டா? மக்கள் நல்வாழ்வுத் துறை இந்தக் கடமையைச் செய்ய வேண்டாமா? நல்லாட்சி (றநடகயசந ளுவயவந) என்ற சொல்லாட்சி என்பது அப் பொழுதுதானே பொருந்தும்.
இந்திரா காந்தி என்ற அம்மையார் சென்னைப் பல்கலைக் கழகத்திலே மயிலாப்பூர் கோவிலைப்பற்றிய ஒரு ஆய்வின்போது, அந்தக் கோயில் மூல விக்கரகத்தில் அபிஷேகம் செய்யப்படும் தண்ணீர் உள்ளிட்ட கலவையை எடுத்துப் பரிசோதனைக்கு கிண்டி கிங் நிறுவனத்திற்கு (முபே ஐளேவவைரவந) அனுப்பியபோது அதில் பலவகைப்பட்ட நோய்க்கிருமிகள் இருந்தன என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டதே  இந்த முன்னுதாரணத்தின் அடிப்படையில் பக்தர்களாக இருந்தாலும்  அவர்களும் மனிதர்கள் தானே -  அவர்களைக் காப்பாற்ற முன்வரவேண்டாமா?
அமாவாசையன்று தீர்த்தமாடி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்கிறார்களாமே  யார் அந்த முன்னோர்கள்? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? மோட்சத்திலா, நரகத்திலா அல்லது மறு உயிர்களாகவா?
உயிர் பிரிந்த பிறகு மறுபிறவி எடுத்து விடுகிறதாகச் சொல்கிறார்களே  அப்படியிருக்கும்போது இந் தத் தர்ப்பணம் எதற்கு? யாருக்குப் போய்ச் சேர்கிறது?
கபிலர் கூறியதுபோல அருந்திய உண்டியால் ஆர்பசி கழிந்தது? என்ற வினாவுக்கு விடையில்லை.
அதுவும் சிரார்த்தம் கொடுப்பது என்றால் எதைக் கொடுப்பது? இறந்தவர் விரும்பும் பொருளையா? அல்லது புரோகிதர் விரும்பும் பொருளையா?
நாட்டில் நடப்பது என்ன? புரோகிதர் விரும்பும் பொருளைத்தானே பொறுக்கி எடுத்துக் கொடுக்கிறார்கள். இதற்குப் பெயர்தான் புரோகிதச் சுரண்டல் என் பது.
அய்.எம்.எப். சுரண்டல், புதிய பொருளாதாரச் சுரண்டலைப்பற்றி எல்லாம் விண்ணை முட்டும் அள வுக்கு விமர்சிப்பவர்கள் கூட, சலனமின்றி நடை பெறும் இந்தப் புரோகிதச் சுரண்டல்பற்றி கண்டுகொள்வதில்லையே!
25.5.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...