ஞாயிறு, 16 ஜூலை, 2017

சுரண்டல்!




மதச்சார்பற்ற அரசு எனக் கூறிக் கொள்ளும் தமிழ்நாடு அரசு சிதம்பரம் நடராஜர் கோயிலை  எடுத் துக்கொண்டது எந்தவிதத்தில் நியாயம் என்று வினா எழுப்பியுள்ளார். தமிழ்நாடு பா... தலைவர் இல. கணேசன்.

இவர் கூறுகிற விவாதப் படி பார்த்தால் கோயிலில் சாமி சிலை களவு போனால் மதச் சார்பற்ற அரசின் காவல்துறை அதைக் கண்டுபிடிக்கக் கூடாது என்று சொல்வார்களா? 15 ஆண்டுகளாகத் தேடப்பட்ட சாமி சிலைகளை காவல் துறையினர் கண்டுபிடித்த செய்தி நேற்றுகூட படங்களுடன் வெளிவந்துள்ளதே!
இந்துக் கோயில்கள் பார்ப்பனர்களின் சுரண்டலுக்கான பேரிடமாக இருக்கின்றன; அதில் அரசு கை வைத்துவிட்டதே என்கிற ஆத்திரத்தில் எதை வேண்டுமானாலும் சொல்லலாமா?

இந்து அறநிலையத் துறை ஏன் தோற்றுவிக்கப்பட்டது? இந்துக் கோவில்களில் பார்ப்பான் பண்ணயம் கேட்பாரில்லை என்கின்ற தன்மையில் அவர்களின் சுரண்டல் பூமியாக இருந்தது.
அம்மன் மூக்கில் மின்னும் வைர மூக்குத்தி அர்ச்சகப் பார்ப்பனரின் பாரியாள் மூக்கில் மின்னிய நிலைமைகள் எல்லாம் உண்டே!

சர்.சி.பி. இராமசாமி அய்யர் தலைமையில் போடப்பட்ட குழுகூட இதுபற்றியெல்லாம் விஸ்தாரமாகவே கூறியிருக்கிறதே! அறியமாட்டாரா கணேசன்வாள்?
இதே சிதம்பரம் கோவிலில் அம்மன் தாலி காணாமற் போயிற்று. தங்கத்தகடுகள் சுரண்டப்பட்டன. கோயில் கிணற்றில் பக்தர்கள் போடும் பணம் கணக்கிடப்பட்டு கோயில் கணக்கில்கொண்டு வர வேண்டும்; ஆனால், தீட்சிதப் பார்ப்பனர்கள்  ஆள் ஏற்பாடு செய்து அந்தப் பணத்தை எல்லாம் அபேஸ் செய்தனர்.

கோயிலுக்குச் செலுத்தப்படும் காணிக்கைகளை எல்லாம் அமுக்கியவர்கள் இந்தத் தீட்சிதர்கள்தாம்.
பார்ப்பனர்களே இதுகுறித்து அரசுக்குப் புகார் அனுப்பியதுண்டு. வருடம் ஒன்றுக்கே வருமானம் ரூ.37 ஆயிரம் என்று கணக்குக் காட்டினார்கள். இந்து அற நிலையத்துறையின் வசம் கோயில் வந்த பின் 40 நாள்களிலேயே உண்டியல் மூலம் வந்த பணம் கிட்டத்தட்ட இரண்டு லட்ச ரூபாய் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதே!

அப்படியென்றால், கோடிக் கோடியாக கோயில் பணத்தை தம் அப்பன் வீட்டுச் சொத்தாக அனுபவித்து வந்தது தீட்சிதர்க் கும்பல். இவற்றையெல்லாம் திருவாளர் இல. கணேசன் நியாயப்படுத்துகிறாரா?
இந்து அறநிலையத் துறையின்கீழ் சிதம்பரம் நடராஜன் கோவில் கொண்டு வரப்பட்டதன் நேர்மையை இப்பொழுதாவது அவாள் ஒப்புக் கொள்வார்களா?

மதச்சார்பற்ற தன்மை என்றால் பார்ப்பனர் கொள்ளையைக் கண்டுகொள்ளக் கூடாது என்று கருதுகிறார்களோ!

27.3.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)



நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2
ஆசிரியர் : கலி.புங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...