திங்கள், 17 ஜூலை, 2017

தாமதம் ஏன்?


கேள்வி: சமீப காலமாக மக்களை ஏமாற்றும் போலிச் சாமியார்கள் நிறைய பிடிபடுகிறார்கள். யார்மீது தவறு?

ஜெயேந்திரர் பதில்: மனிஷனுக்குப் பேராசை இருக்கிறவரைக்கும் இந்தப் பிரச்சினை இருக்கத்தான் செய்யும். ஏன்னா சுருக்கு வழியில் சம்பாதிக்கனும்னு ஆசைப்படுகிற நிறையபேர் போலிச் சாமியாராக எழுந்தருளி இருக்காங்க. ஜனங்களும் இவங்கள நம்பிப் போறாங்க. இதனால ஜனங்க, சாமியார்கள் இரண்டு பேருக்குமே ஆபத்து வருது. ஆனா ஜனங்க தப்பிச்சு வேறொரு சாமியார்கிட்ட போயிடுறாங்க. இவங்களை நம்பி வேஷம் போட்ட சாமியார்கள்தான் ஜெயிலுக்குப் போறாங்க. அதனால இந்த விஷயத்தில் சாமியார்கள் தான் பொது ஜனங்ககிட்ட இருந்து பயந்து ஒதுங்கியிருக்க வேண்டும் (சொல்லி விட்டு, வாய்விட்டு ரசித்துச் சிரித்தார்).
- (குங்குமம், 27.3.1998).

எவ்வளவு தொலைநோக்கோடு சாமியார்களைப்பற்றி விஸ்தாரமாகப் பேசிசிரித் திருக்கிறார். தான் சொன்னது தனக்கே வரும் என்று அவர் கிஞ்சிற்றும் எதிர்பார்த் திருக்கமாட்டார். அவர் தொலைநோக்கோடு சொன்னபடி, இப்பொழுது மக்கள் வாய்விட்டு ரசித்துச் சிரிக்க வேண்டியதுதான்.

வேஷம் போட்ட சாமியார்கள்தான் ஜெயிலுக்குப் போறாங்க. ஆம், அப்படித் தான் ஜெயேந்திர சரஸ்வதியும், குட்டி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதியும் ஜெயிலுக்குப் போனாங்க.

என்ன திடீரென்று சங்கராச்சாரியார்பற்றி இன்று... பொருத்தம் இல்லாமலா? ஆறு ஆண்டுகளுக்குமுன் (2004) இதே நாளில்தான் காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார் ஜெயேந்திரர்.

இந்தியன் கிரிமினல் கோட் 302, 120-பி, 34, 201 ஆகிய பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்டார். 61 நாள்கள் ஜெயேந்திரர் மாமியார் வீட்டுக்குச் சென்று ஜெயில் கம்பிகளை எண்ணிக் கொண்டிருந்தார்.

இவரது ஜூனியர் 31 நாள்கள் மாமியார் வீட்டில் இருந்தார். ஜாமீனில் வெளியே வந்து சென்னை ஆயிரம் விளக்குப் பகுதி காவல் நிலையத்தில் மூன்று வாரம் கையொப்பம் போட்டுக் கொண்டு கடந்தார் - சென்னையை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று ஆணை.

ஜெகத்துக்கே குருக்களின் யோக்கியதை இத்தியாதி - இத்தியாதிதான்.

ஆறு ஆண்டுகள் ஆகி விட்டனவே, இவர்கள் மீதான வழக்கு என்னா யிற்று? சாட்சிகள் எல்லாம் பல்டி அடிப்பது ஏன்? இதுபற்றி அரசு ஆய்வு செய்யவேண் டும். என்னென்ன காரணங் களால் பிறழ் சாட்சிகளாயி னர் என்பது மிகவும் முக் கியம். வழக்கு விசாரணை யைக் காலம் கடத்த கடத்த குற்றவாளிகளுக்குத்தான் கொண்டாட்டம். இதற்குப் பின் நடந்த பல கொலை வழக்குகளில் தீர்ப்புகள் வந்துவிட்டனவே! இவர் வழக்கு மட்டும் ஏன் இப்படி? சங்கராச் சாரி என்றால் அசல்  நெய்யில் பொரித்த அப்பளமோ!

                11.11. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : ஒற்றைப்பத்தி - 3


ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...