தமிழர்களுக்குப் புத்தாண்டு என்பதும், புத்தாண்டு புது நாள் என்பதும் தைத்திங்கள் முதல்நாள்தான். தமிழ்க்கடல் மறைமலை அடிகளார், பேராசிரியர் க. நமசிவாயனார், தமிழ்த்தென்றல் திரு.வி.க. போன்றவர்களும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரும், பகுத்தறிவு இயக்கமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இக்கருத்தை வலியுறுத்திக் கூறி மக்களின் அனுமதியையும் திரட்டி வந்தனர். தொடர்ந்து இக்கொள்கைக்கு நாட்டில் ஆதரவு வளர்ந்தும் வருகிறது.
இந்து மதத்தைத் தழுவியுள்ளவர்களுக்கு ஆயிரத்தெட்டு கடவுள்களும், புராணக்கதைகளும், இதிகாசங்களும், இன்ன பிற மூடப் பழக்கவழக்கங்களும் எவ்வாறு இருந்து வருகின்றனவோ, அதேபோன்று புத்தாண்டு தொடக்க நாளையிலும் ஒன்றுக்கு மேற்பட்ட புத்தாண்டு நாள்களாக இருக்கவேண்டும் போலும்!
இப்படி பகுத்தறிவுக் கண்கொண்டு பார்த்து கருத்துகளைக் கூறும் திராவிட இயக்கத்தின் முன்னோடி என்.வி.
நடராசன் அவர்களின் நினைவு நாள் இன்று (1975).
அவர் பிறந்தது 12.11.1912 பெற்றோர் விசயரங்கம் தனலட்சுமி ஆகியோர் ஆவர்.
இந்தி எதிர்ப்பு உணர்வு இவரைத் திராவிட இயக்கத்தின்பால் ஈர்த்தது.
இவரது இணையர் புவனேசுவரி அம்மையார் 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைக்குழந்தையுடன் (என்.வி.என்.
சோமுதான், அந்தக் கைக்குழந்தை பிற்காலத்தில் மத்திய இணை அமைச்சராக இருந்தவர்) சிறைக்கோட்டம் சென்றவர்.
திராவிடன் என்னும் இதழை நடத்தி வந்தார். தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர், தலைமை நிலைய செயலாளர் என்னும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நாளும் உழைத்தவர். இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு சிறை பல சென்றவர்.
கலைஞர் ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்துள்ளார்.
ஆனந்தபோதினியில் அச்சுக் கோப்பவராகயிருந்து விடாமுயற்சியாலும், இலட்சியப் பற்றாலும் மேல்நிலைக்கு வந்தவர்.
இவரைப்பற்றி தந்தை பெரியார் கூறினார், இவர் எனது தனிச் செயலாளராக இருந்ததோடு மட்டுமல்லாமல், உண்மையானவராகவும் (ளுஉநசந) இருந்து பணி புரிந்தவர் என்று கூறினார் என்றால், இந்தச் சுயமரியாதைச் சுடரொளியின் பெருமைக்கு வேறு நற்சான்றும் தேவையோ!
இவரைப்பற்றி அண்ணாவும் சொல்கிறார்: திராவிடர் கழகத்திலிருந்தபோது, அதன் வளர்ச்சிக்காக, தன்னலமற்று தம்மையே ஒப்படைத்துக் கொண்டு உழைத்தவர் என்.வி.என்.!
தந்தை பெரியார் அவர்கள், அவர்மீது அன்பைப் பொழிந்ததோடு நிற்கவில்லை. பெரும் நம்பிக்கை வைத்திருந்தார். எந்தளவுக்கு என்றால், தாம் எங்கே சென்றாலும், காரிலோ, வண்டியிலோ என்.வி.என்.னைத் தம்முடன் அழைத்துச் செல்லும் அளவுக்கு.
போராட்டங்களில் ஈடுபட்டு சிறைக்கோட்டம் செல்வதிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர் நண்பர் நடராசன். கொள் என்றால் வாய் திறப்பதும், கடிவாளம் என்றால் வாயை மூடிக்கொள்வதும் குதிரைகளுக்கு மட்டுமே சொந்தமான இயல்பு இல்லை. சில சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளிடமும் அந்தப் போக்குண்டு. ஆனால், என்.வி.என்.
அத்தகைய கோழை அல்லர் கொள்கைக் குன்று என்று அண்ணாவின் அரிய பாராட்டைப் பெற்றவர்.
அவர் அமைச்சராக இருந்தபோது கீழ்வேளூரில் தந்தை பெரியார் தன்மானப் பேரவையின் சார்பில் நடத்தப்பட்ட பெரியார் பிறந்த நாள் விருந்து விழாவில், தந்தை பெரியாரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே பேசினார், அய்யா ஆணையிட்டால் இந்த அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு சமுதாயத் தொண்டு செய்யத் தயார் என்றவர்.
அய்யா மறைந்த நிலையில், திடீர் திடீர் என்று அய்யாவை நினைத்துக்கொண்டு சென்னையில் தந்தை பெரியார் தங்கும் இடத்திற்கு வந்து சிறிது நேரம் நின்று கண்ணீர் உகுத்த நிகழ்ச்சிகளும் பலமுறை உண்டு.
என்.வி.என்னை நினைப்போம், இலட்சியத்திற்கே முதல் இடம் கொடுப்போம்!
3.8.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக