ஞாயிறு, 16 ஜூலை, 2017

ஹாக்கி


இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி; ஒரு காலத்தில் உலக அளவில் இந்திய ஹாக்கி கொடி கட்டிப் பறந்ததுண்டு.

இடையில் கிரிக்கெட் என்ற ஒட்டகம் உள்ளே புகுந்தது. அவ்வளவுதான் ஹாக்கி மூட்டை கட்டி பரண்மீது தூக்கி எறியப்பட்டது.

ஹாக்கி வீரர்கள் தொழிற்சங்கத் தொழிலாளர்கள்போல் சம்பளம் கேட்டுப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர். சம்பள நிலுவைக்காகவும் ஹாக்கி வீரர்கள் போராடினார்கள் என்றால், எவ்வளவு பெரிய வெட்கக்கேடு!

இப்பொழுதுதான் போனால் போகிறது என்று அவர்களுக்குச் சம்பளம் நிச்சயம் செய்துள்ளார்களாம்.
எவ்வளவு தெரியுமா?

உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாயாம். அடுத்துவரும் ஆசியப் போட்டி, காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும்போது ரூபாய் அய்யாயிரமாம்!

கிரிக்கெட் விளையாட்டுக்காரர்களோடு ஒப்பிடும்போது இது ஒரு பிச்சைக் காசு என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்குச் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அதில் , பி, சி என்று மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றனர். பிரிவைச் சேர்ந்த கிரிக்கெட் விளையாட்டுக்காரர்களுக்கு ஆண்டு சம்பளம் ரூபாய் 50 லட்சம் (8 பேர்கள்). பி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.35 லட்சம் (7 பேர்கள்). சி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.20 லட்சம். இது அல்லாமல் உள்நாட்டில் டெஸ்ட் ஆட்டம் ஆடினால் ரூ.2 லட்சம்; வெளிநாடுகளில் ஆடினால் ரூ.2.40 லட்சம்; உள்நாட்டில் ஒரு நாள் ஆட்டத்துக்கு ரூ.1.60 லட்சம்; வெளிநாட்டில் ஆடினால் ரூ.1.85 லட்சம்.

இவை அல்லாமல் ஏகப்பட்ட பரிசு மழைகள். இந்தப் புள்ளிவிவரம்கூட 2004 ஆம் ஆண்டுக்குரியது தான். இந்த ஆறு ஆண்டுகளில் பல மடங்கு பெருகியிருக்கும்.

இவ்வளவுக்கும் கிரிக்கெட் என்பது சொகுசான ஒன்று. ஹாக்கி, கால்பந்து போன்ற போட்டிகளில் பங்குகொள்ளும் அத்தனைப் பேர்களும் ஒவ்வொரு நொடியும் சுறுசுறுப்பாகவும், ஓடியும், ஆடியும் களைத்துப் போகும் நிலை.

கிரிக்கெட் அப்படியல்ல; ஒருவர் பந்து வீசுவார், இன்னொருவர் அடிப்பார்; ஒரு சிலர் பந்தை விரட்டிக்கொண்டு ஓடுவார்கள்; மற்றவர்கள் பார்வையாளர்களின் ஆட்டோ கிராஃ-பில் கையொப்பம் போட்டுக் கொடுத்துக்கொண்டு இருப்-பார்கள்.

விளையாட்டில்கூட இந்தப் பிராமண சூத்திர வருணாசிரம பிரிவு இருக்கிறதே என்ன செய்ய?

கிரிக்கெட்டில் அனேகமாகப் பார்ப்பனர்கள்; ஹாக்கி-யில் அனேகமாக சூத்திரர்கள்தாம்!

5.3. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 3,


ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...