தமிழக முதல்வர் கருணாநிதி: ஜாதி,
மத,
மொழி வேறுபாடுகளுக்கு இடம் கொடாமல், ஒன்றுபட்டு நின்று, சுதந்திரத்தின் பயன் முழுவதையும் நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து கிடைக்க, அனைவரும் உறுதியேற்போம்.
டவுட் தனபாலு: என்னது... ஜாதி,
மத வேறுபாடுகளுக்கு இடம் கொடாமலா... அப்படின்னா... இனிமே, இந்துன்னா திருடன்னு அர்த்தம்னும், சிங்கங்கள் நடமாடலாம்; சிறுத்தைகள் நடமாடக்கூடாதான்னும், அவாள், இவாள் பற்றியும் பேச மாட்டீங்களா? (தினமலர், 15.8.2009)
தென்னாட்டுப் பார்ப்பனர்களைப்பற்றி லாலாலஜபதிராய் கூறுவார்: தாங்களே துவேஷிகளாக இருந்து மற்றவர்களைப் பார்த்து துவேஷிகள், துவேஷிகள் என்று கூறுவார்கள் என்று.
அது இன்றைக்கும் பொருந்தக்கூடியதாகும். ஆழ்கடல் மூழ்கி அந்தரத்தில் பாய்ந்து பெரிய ஆராய்ச்சிகள் தேவையில்லை இதற்கு.
தினமலர், தினமணி, இந்து, துக்ளக் ஏடுகளைப் புரட்டினாலே போதும். பார்ப்பனர்கள் கக்கும் ஆலகால விஷம் எத்தனை டிகிரியில் கொப்பளிக்கும் என்பதை எளிதில் தெரிந்துகொள்ளலாம்.
இந்து என்றால் திருடன் என்று ஏதோ கலைஞர் அவர்கள் தன் விருப்பத்திற்கேற்ப கோருவதாக ஒரு தோற்றத்தை உருவாக்கப் பார்ப்பதிலும்கூட பார்ப்பன விஷம் பளிச்சென்றே தெரிகிறது!
உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் கமலபதி திரிபாதியின் நூலிலிருந்து எடுத்துக்காட்டியுள்ளார்.
திரிபாதி என்ற பார்ப்பனர்மீது அல்லவா கோபம் கொப்பளித்துக் கிளம்பவேண்டும்? சாமி தயானந்த சரஸ்வதி எழுதிய ஞான சூரியனிலும் இந்த விவரம் தரப்பட்டுள்ளதே. உண்மை இவ்வாறு இருக்க முதல்வரோடு முட்டிக்கொள்வதில் துவேஷம் இருக்கிறதே தவிர,
உண்மை சிறிதும் இல்லையே!
ஆண்டுதோறும் ஆவணி அவிட்டத்தன்று பூணூலைப் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறார்களே, அதன் பொருள் என்ன?
நாங்கள் பிராமணர்கள், துவி ஜாதியினர் - இரு பிறப்பாளர்கள்
பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள். நீங்கள் எல்லாம் சூத்திரர்கள் என்று சொல்லாமல் சொல்வதுதானே?
சூத்திரன் என்றால் யார்? உங்கள் மனுதர்மம் என்ன சொல்கிறது?
யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன், யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன், பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன், விபசாரி மகன்,
விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன் என்று கூறும் கூட்டம் இனத் துவேஷிகளா? இந்த இழிவை எதிர்த்துத் தன்மானக் குரல் கொடுக்கும் திராவிடர் இயக்கமும், அதன் தலைவர்களும் இனத் துவேஷிகளா?
நீங்கள் பூணூல் போட்டுக்கொண்டு திரிவது மட்டுமல்லாமல், சாமி சிலைகளுக்கும் பூணூல் போட்டுள்ளீர்களே! சமீபத்தில் திருப்பதி வெங்கடாசலபதிக்குக்கூட மூன்று கிலோ தங்கத்தில் பூணூல் போட்டாரே சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி
இதன் பொருள் என்ன?
பூணூலைக் கழற்றித் தூக்கி எறிந்துவிட்டு மனுதர்மம், இராமாயணம், வேதங்களைக் கொளுத்தி எறிந்துவிட்டு, அதற்குப்பின் முடிந்தால் எங்களைக் குறைகூற முயற்சியுங்கள்.
17.8.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி -
2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக