வடபுலத்தில் தேசிய காங்கிரஸ் மகாசபைக்கு எதிராக முஸ்லிம் லீக்கைத் தோற்றுவிப்பதிலே வெற்றி கண்டது போல, தென்புலத்தில் பிராமணரல்லாதார் கட்சியைத் தோற்றுவிப்பதிலே, இந்திய வைஸ் ராயும், சென்னை மாகாண கவர்னரும் வெற்றி கண்டனர் என்று சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் எழுதியுள்ளார். (துக்ளக் 6_-7_-2011) என்று திருவாளர் கே.சி.
லட்சுமி நாராயண அய்யர்வாள் எடுத்துக் காட்டியுள்ளார்!
இவர்களுக்குப் போயும் போயும் ம.பொ.சி.
தான் கைக் கருவியாகக் கிடைத்துள்ளாரா?
திராவிட இயக்கத்தைத் தேசத் துரோக அமைப்பு என்று குற்றம் சாட்டும்போது, திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகளை நடத்திய ம.பொ.சி.யைத்தானே தேடிப் பிடிப்பார்கள்?
இதில் ஒரு பரிதாபம் என்ன தெரியுமா? காலம் பூராவும் திராவிட இக்கத்தைத் திட்டிக் காலம்
கழித்த ம.பொ.சி.
அவர்கள் கடைசிக் காலத்தில் திராவிட இயக்கத்தினி டத்தில் தான் சரண் அடைந்தார் என்பதுதான் அந்தப் பரிதாபம்!
காலம் காலமாக காங்கிரஸ்காரன் என்று தன்னைச் சொல்லிக் கொண்ட அவருக்குக் காங்கிரசில் எந்தப் பதவியும் கிட்டவில்லை. திராவிட இயக்க ஆட்சிக் காலத் தில்தான் எம்.எல்.ஏ. பதவியும், மேலவை உறுப்பினர் பதவியும், அதன் பின் மேலவைத் துணைத் தலைவர் பதவியும், கடைசிக் காலத் தில் மேலவைத் தலைவர்
பதவியும் மேலவை கலைக்கப்பட்ட நிலையில் தமிழ் உயர் மட்டக் குழுத் தலைவர் பதவியும் கிடைத்தன என்பது சரித்திர உண்மை. திராவிட இயக்கத்தைப் பற்றி அவர் என்ன சொல்லியிருந்தாலும், கொச்சைப்படுத்தியிருந்தாலும், ம.பொ.சி.
நம்பும் வைதிக மொழியில் சொல்ல வேண்டுமானால் கடைசிக் காலத்தில் அதற்கான பாவ மன் னிப்பையும், பிராயச் சித்தத்தையும் திராவிட இயக்கத்தினிடம்தான் பெற்றார்.
அண்ணா முதல் அமைச்சர் ஆன நிலையில் எப்படியாவது ஓர் அமைச்சராக வேண்டும் என்பதற்காக அவர் பட்ட பாடு நகைப்புக்குரியது. அமைச்சரவையில் இடம் கொடுத்தால் தனது தமிழரசுக் கழகத்தையே கலைத்துவிடுவதாகச் சொன்ன கட்சிக்காரர் அவர்.
ஆனந்தவிகடன் ஏடு
(3-_9_-1967) அப்பொழுது ஒரு கார்ட்டூன் போட்டது. நாற்காலியைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ம.பொ.சி.
அவர்கள் அண்ணா, அண்ணா! தம்பி வந்திருக்கேன்! என்று கேலி செய்யப் பட்டதே --_ துக்ளக் பார்ப்பன ஏட்டுக்கு ஆனந்தவிகடன் பார்ப்பன ஏட்டின் கார்ட்டூன்தான் பொருத்தமானது.
தனக்கென்று வந்தால்தானே தெரியும் தலைவலியும், வயிற்று வலியும்!
நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி,
ஆசிரியர் “ கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக