1971 ஆம் ஆண்டு தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளராக உதய சூரியன் சின்னத்தில் ம.பொ.சி.
நின்றார். அவரை எதிர்த்து ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் திருமதி அனந்தநாயகி போட்டியிட்டார்.
பரமபக்தரான ம.பொ.சி.
மயிலை கபாலீசுவரர் கோயிலுக்குச் சென்று தன் பெயரில் அர்ச்சனை செய்யுமாறு அர்ச்சகரை வேண்டினார்.
அந்த அர்ச்சகப் பார்ப்பான் என்ன செய்தான் தெரியுமா? ம.பொ.சி.யிடம் அர்ச்சனைக்கான துட்டை வாங்கிக் கொண்டு அவரை எதிர்த்து நின்ற அனந்தநாயகி அம்மையார் பெயருக்கே அர்ச்சனை செய்துவிட்டார். அந்த அளவு
1971 ஆம் ஆண்டு தேர்தல் பார்ப்பனர், -பார்ப்பனர் அல்லாதார் போராட்டமாக உச்ச நிலையில் விளங்கியது.
அன்று மயிலாப்பூர் தொகுதி 97 ஆவது வட்டத்தில் பேசியபோது ம.பொ.சி.
தனக்கு ஏற்பட்ட இந்த அவமரியாதையைக் குறித்து ஆவேசமாக அவருக்கே உரித்தான தொனியில், மீசையை இடது கையால் ஒரு தடவி தடவி ஆக்ரோஷமாக கர்சித்தார்.
பார்ப்பனர்களின் ஓட்டு மட்டும் சிண்டிகேட்டுக்குப் போதுமா? மயிலாப்பூரில் ஒரு லட்சத்துப் பதினாயிரம் ஓட்டுகள் இருக்கின்றன. இதில் பிராமணர்கள் ஓட்டு 17 ஆயிரத்து அய்நூற்றுச் சொச்சம்; இந்த ஓட்டுகள் மட்டும் கிடைக்கும் என்று வைத்துக் கொண்டாலும், அனந்தநாயகி அம்மையார் வெற்றி பெறுவாரா? என்று மூச்சு முட்ட முழங்கினார்.
துக்ளக் பார்ப்பனக் கூட்டமும், திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்தி பார்ப்பன அம்சமாக பேனா பிடித்த எழுத்தாளரும், ம.பொ.சி.யை துணைக்கழைத்து கடைசியில் தங்கள் உள்ளி மூக்குகளை உடைத்துக் கொண்டதுதானே மிச்சம்!
நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி,
ஆசிரியர் “ கவிஞர் கலி.பூங்குன்றன்
நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி,
ஆசிரியர் “ கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக