ஞாயிறு, 16 ஜூலை, 2017

ஜாதி ஒழிப்புக்காகச் சிறை



இந்திய அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டம்  (26-_11-_1957) என்பது ஜாதி ஒழிப்புப் போராட்டமே!
இலட்சோப லட்ச மக்களை தஞ்சையில் கூட்டி (ஜாதி ஒழிப்பு - தனி மாநாடு) அதில் எடுக்கப்பட்ட முடிவு அது! (3_11_1957)

ஒரு சுதந்திர நாட்டில் ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டம் இருக்கலாமா? ஜாதி பாதுகாக்கப்படும் நாட்டில் சுதந்திரம் இருக்குமா? இந்தக் கேள்விக்கு என்ன பதில்?

இந்திய அரசமைப்புச் சட்டம் 13(2), 25 (1)29 (1) (2) 368 பிரிவுகளைச் சுட்டிக் காட்டி, அந்தப் பகுதிகள்தான் அச்சிட்டு எரிக்கப்பட்டன.
தந்தை பெரியார் இந்தப் போராட்டத்தை அறிவித்த கால கட்டத்தில், சட்டத்தை எரித்தால் என்ன தண்டனை என்று சட்டத்திலேயே  இல்லை!

அவசர அவசரமாக தமிழ்நாடு சட்டப் பேரவையில்  நிறைவேற்றப்பட்டது - தேசிய மரியாதை அவமதிப்புத் தடுப்புச் சட்டம் (Prevention of Insult to National Honour Act,1957)  என்று பெயர். அதன்படி மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்கப்படலாம்.

நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...