திங்கள், 17 ஜூலை, 2017

அய்யங்கார்


கேள்வி: தேவர், நாயுடு, பிள்ளை, கோனார்.... என்று நம்மை அடையாளம் காட்டிக் கொள்ளக்கூடாது. தமிழர் என்றுதான் நம்மை அடையாளம் காட்டவேண்டும் என்கிறார் ஸ்டாலின்! இந்த அட்வைஸைத் தேர்தல் சமயத்தில் வேட்பாளரைத் தேர்வு செய்யும்போது ஸ்டாலின் கடைப்பிடிப்பாரா?
பதில்: ! கடைப்பிடிப்பாரே! ஆனால், ஒரு விஷயம், எந்தெந்தத் தொகுதியில், எந்தெந்த ஜாதியிடம் அதிக ஓட்டு இருக்கிறதோ, அந்தந்த ஜாதியே அந்தத் தொகுதியில் தமிழர்கள்; மற்ற ஜாதியினர் தமிழர்விரோதிகளா? இந்தக் கொள்கை விளக்கம் உங்களுக்குப் புரிந்தால் - ஸ்டாலின் கூறிய அட்வைஸின் சிறப்பு உங்களுக்குத் தெளிவாகும்.
- (துக்ளக், 24.11. 2010  பக்கம் 20).

தமிழர்கள் என்ற ஒரு சொல் எங்கேயிருந்து ஒலிக்கப்பட் டாலும், அது துக்ளக் போன்ற பார்ப்பனக் கோட்டான்களுக்கு ஒவ்வாமையாகி அலறிக் கொண்டே இருக்கும்.

இந்த ஜாதி என்னும் நோய் பரவிதான் தமிழன் என்ற உணர்வை உருக்குலைத்தது - குலைக்கிறது என்பது பால பாடம்.

கோயில் வழிபாடுகளில், அர்ச்சகர்ப் பணிகளில் ஜாதிக்கு இடம் கூடாது; பார்ப்பானுக்கு மட்டும் ஏகக்குத்தகை என்பது ஒழிக்கப்படவேண்டும் என்று சொல்கிறபோது, இந்த சோ கூட்டம் எகிறிக் குதிப்பதைப் பார்க்க முடியும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெயருக்குப்பின் ஜாதிப் பட்டம் போட்டுக்கொள்வது என்பது அனேகமாக ஒழிந்து விட்டது. ஜாதிக்கட்சிகள் தமிழ்நாட்டில் உண்டு என்றாலும், அவை தேர்தலில் வெற்றி பெற முடிவதில்லை - தமிழ்நாட்டில் என்பது யதார்த்தமாகும்.

ஜாதி மறுப்புத் திருமணங்கள் ஆயிரக்கணக்கில் நடந்து தான் வருகின்றன. மாண்புமிகு மு.. ஸ்டாலின் வீட்டிலும் ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன. இவையெல்லாம் சோ கூட்டத்துக்குத் தெரியாதா என்ன?

தேர்தலில் கட்சிகளின் அடிப்படையில் போட்டியிடாமல், அதிக எண்ணிக்கையில் உள்ள ஜாதி வேட்பாளர் ஒருவரை நிறுத்தி வெற்றி பெறச் செய்ய முடியுமா என்று சவால் விட்டேகேட்கிறோம்.

சில தொகுதிகளில் தம் கட்சியைச் சேர்ந்த ஒருவர் செல்வாக்குடன் இருந்தால் - அவர் பெரும்பாலான சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தால் தேர்தலில் நிற்க வைப்பது என்பது இயல்பான ஒன்றே!

கலைஞர் போன்றவர்கள் இதுவரை தாம் நின்ற அத்தனைத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றாரே - அது ஜாதியின் அடிப்படையிலா?

உண்மை என்னவென்றால், பார்ப்பனர்கள் மட்டுமேதான் விடாப்பிடியாக முரட்டு ஜாதி உணர்வோடு - பூணூலை முறுக்கிக் கொண்டு செயல் படுகிறார்கள் என்பதுதான்.

கடந்த மக்களவைத் தேர்தலில் - திருச்சி நாடாளுமன்றத் தேர்தலில் என்ன நடந்தது? அந்தத் தொகுதியில் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உண்டு. அய்ந்து சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர், .தி.மு.. வேட் பாளரைவிட அதிக வாக்குகள் பெற்றிருந்தும், ஆறாவது தொகுதியான சீரங்கத்தில் மட்டும் .தி.மு.. வேட்பாளர் களுக்கு அந்த அய்ந்து தொகுதிகளின் வித்தியாசத்தையும் தாண்டி, அதிக வாக்குகள் கிடைத்து வெற்றி பெற்றார் என்றால், இதற்குள் பதுங்கியிருக்கும் உண்மை என்ன? சீரங்கத்தில் மட்டும் .தி.மு.. வேட்பாளர் 20182 வாக்குகள் பெற்றது எந்த அடிப்படையில்?
பூணூலைப் பிடித்துக் கொண்டு சீரங்கத்து அய்யங்கார்ப் பார்ப்பனர்கள், சீரங்க அய்யங்கார் ஜெயலலிதா அம்மையாரின் கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வு தானே இதற்குக் காரணம்? மறுக்க முடியுமா?

பூணூலை எழுது கோலாக்கி, எழுதும் சோக்கள் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற பாணியில் கிறுக்கவேண்டாம்!

20.11. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : ஒற்றைப்பத்தி - 3


ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...