ஞாயிறு, 16 ஜூலை, 2017

ரகசிய வீடியோ



குஜராத் மாநிலம் தபோய் என்ற பகுதியிலுள்ள வட்தால் சுவாமி நாராயன் கோவில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு வரும் பக்தைகளிடம் சாமியார்களான சந்த், தேவ் வல்லப் ஆகியோர் வரம்பு மீறி நடப்பதாக கோயில் நிருவாகத்துக்குத் தொடர்ந்து புகார்கள் வந்திருக்கின்றன. அதுவும் கோயிலுக்குள் உள்ள குடிலிலேயே இந்தக் கூத்துகள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால், சாமியார்களைப் பிடிக்காத சிலர்தான் இப்படி பொய்ச் செய்திகளைப் பரப்புகிறார்கள் என்று கோயில் நிருவாகம் மறுத்து வந்தது.

இதையடுத்து சாமியார்கள் பெண்களுடன் இருப்பதை ரகசியமாக வீடியோ படமெடுத்து ஆதாரத்துடன் வெளியிடுவது என்ற முடிவுக்கு எதிர்த்தரப்பினர் வந்திருக்கின்றனர்.அடுத்த கட்டமாக மினியேச்சர் வீடியோ காமிரா ஒன்று சாமியார்களின் குடிலுக்குள் பொருத்தப்பட்டது. இதையறியாத சாமியார்கள் வழக்கம்போல அறைக்குள்ளே பாலியல் கூத்தடிக்க அது அப்படியே வீடியோவில் பதிவாகிவிட்டது.

வீடியோவில் பதிவான காட்சிகளை வி.சி.டி.யாக மாற்றம் செய்த எதிர்த்தரப்பினர் அதை குஜராத்தின் பிரபல பத்திரிகையான சந்தேஷுக்கு அனுப்பி விட்டனர். (நவம்பர்_2004)

அந்த வீடியோவில் சம்பந்தப்பட்ட அனைவரின் முகங்களும் தெள்ளத் தெளிவாகவே பதிவாகியிருக்கின்றன.

ஒரு பெண் அமர்ந்திருக்கும் காட்சி வீடியோவில் முதலாவதாக இடம் பெற்றிருக்கிறது. கோயிலுக்கு அடிக்கடி வந்து செல்லும் அந்தப் பெண்ணின் பெயர் ரூபல்.

அடுத்து வெள்ளை பைஜாமா அணிந்த கோயிலின் பணியாளர் ஒருவர் பாய் மற்றும் தலையணையை அந்த அறையினுள் விரித்து விட்டுச் செல்கிறார். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து தலையில் குடுமி, நெற்றியில் நாமம், கழுத்தில் ருத்திராட்சம், மார்பில் பூணூல், இடுப்பில் காவி சகிதமாகத் தோற்றமளிக்கும் சாமியார் தேவ் வல்லப் அந்த அறையினுள் நுழைகிறார். அறையில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கினை தேவ் மெல்ல அணைக்க, அந்தப் பெண்ணோ, ‘விளக்கை  அணைக்க வேண்டாம் ப்ளீஸ்.... அது எரியட்டும்’ என்று தடுக்க மீண்டும் ஸ்விட்ச் ஆன் செய்யப்படுகிறது.

பின்னர் ரூபலை நெருங்கும் சாமியார், அவரது ஆடைகளைக் களைகிறார். ‘வேண்டாமே’ என்று மறுக்கும் ரூபலை தனது வாயில் விரலை வைத்தபடி ‘மூச்’ என எச்சரித்து, காரியமே கண்ணாக சாமியார் இயங்க ஆரம்பிக்கிறார். முரட்டுத்தனமாக தேவ் வல்லப் படர்ந்து கொள்ள, வேறு வழியின்றி அந்தப் பெண்ணே தனது உடைகளைக் களைகிறார். தேவ் வல்லப் தன்னுடைய இச்சையைத் தணித்துவிட்டு வெளியேற, அடுத்த விளையாட்டைத் தொடர சாமியர் சந்த் உள்ளே நுழைகிறார்.
தேவ் வல்லப்பிற்கு தான் சளைத்தவனில்லை என்பதைப் போல சந்த்தும் ரூபலிடம் உடலுறவு கொள்கிறார். இந்தச் செய்தியும், படங்களும் பத்திரிகையில் மட்டுமன்றி, சந்தேஷின் இணையதளத்திலும் வெளியாக மிகப் பெரிய அளவிலான பரபரப்பு குஜராத்தைப் பற்றிக் கொண்டது. கோயிலுக்குள் இது போன்ற கயவர்கள் இருக்கவே கூடாது என்று கொதித்துப்போன தபோய் நகரத்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்க, சிலர் இனி இந்தக் கோயிலே தேவையில்லை என கோயிலையும் தாக்க முற்பட்டனர். பின்னர் கோயில் அர்ச்சகர்கள், சாமியார்கள் கைது செய்யப்பட்டனர்.


நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.புங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...