திங்கள், 17 ஜூலை, 2017

டாக்டர் டி.எம். நாயர்


தென்னாட்டு லெனின் என்று தந்தை பெரியார் அவர்களால் புகழ் மகுடம் சூட்டப்பட்ட டாக்டர் டி.எம். நாயர் (தாரவாட் மாதவன் நாயர்) அவர்களின் நினைவு நாள் இன்று (1919).

நாயர் தலைசிறந்த பகுத்தறிவுவாதி; சொந்த ஊர் கேரள மாநிலம் பாலகாட்டுக்குப் பக்கத்தில் உள்ள தாரவாட் என்பதாகும்.

அவருடைய தந்தையார் மாவட்ட முன்சீப்பாகப் பணியாற்றியவர். அவருடைய அண்ணன் அந்தக் காலத்திலேயே பாரிஸ்டர் பட்டம் பெற்று டெபுடி கலெக்டராகப் பணியாற்றியவர்.

டாக்டர் டி.எம். நாயர் அவர்களோ சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.. படித்து முடித்து, சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து, இங்கிலாந்து சென்று எடின்பரோ பல்கலைக் கழ-கத்தில் (1894) மருத்துவத் துறையில் வி.ஙி; சிலீ.ஙி. பட்டம் பெற்று, அதன்பின் காது, மூக்கு, தொண்டை தொடர்பான அறுவை சிகிச்சைக்கான கல்வியையும் பயின்று எம்.டி. பட்டம் பெற்றவர் (1896).

மரபு வழி பெருமையிலும், கல்வி வழி பெருநிலையிலும் உயர்ந்த டாக்டர் நாயர் பெருமான், பார்ப்பனர் அல்லாதார் முன்னேற்றத்திற்காக உழைத்த பாங்கும், பெற்றியும் இருக்கிறதே  அவற்றை எடுத்-துச் சொல்ல வார்த்தைகள் போதவே போதாது.

காங்கிரஸ்காரராகப் பொது வாழ்வில் அடியெடுத்து வைத்து, சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராகப் பணி-யாற்றி (தொடர்ந்து 12 ஆண்டுகள்) பிற்காலத்தில் நீதிக்கட்சி தோற்றுவிக்கப்பட மூல வித்தாக இருந்த மூவரில் ஒருவராகவும் திகழ்ந்தார். (டாக்டர் சி. நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் ஆகியோர்தான் அந்த மும்மணிகள்).

ஜஸ்டிஸ் பத்திரிகையின் ஆசிரியராக இருந்து அவர் எழுதிய எழுத்துகளும், தலையங்கங்களும் படித்தோர் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தின. குறிப்பாக அக்கிரகார அம்மணியாகவே (பிராமிணி) ஆகிவிட்ட அய்ரீஷ் பெண்மணி அன்னிபெசன்ட் அம்மையாருக்கு ஜஸ்டிஸ் ஏட்டின்மூலம் கொடுத்த சூடுகள் கொஞ்சநஞ்சமல்ல. ஆண்டி செப்டிக் என்ற மாத இதழையும் நடத்தி வந்தார்.

பார்ப்பனர்களைப் பற்றி டாக்டர் நாயர் கூறிய அந்தப் பொன்மொழி அனுபவ மொழி மிகவும் புகழ் பெற்றதாகும்.

எத்தியோப்பியன் தன் நிறத்தை மாற்றிக் கொண்டாலும், சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும்பார்ப்பனர்கள் தங்களின் பிறவிக் குணத்தை  மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள் என்பதுதான் அந்தப் புகழ் ஓச்சம் பொருள்மொழியாகும்.

பார்ப்பனர் அல்லாதாரின் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்காக தமது சொந்த செலவில் லண்டன் சென்றார். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை ஆங்கிலேயரையே கிறங்க வைத்தது. லண்டன் டைம்ஸ், கார்டியன் போன்ற ஏடுகள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன.

இரண்டாவது முறையாக டாக்டர் நாயர் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முன் சாட்சியம் அளிப்பதற்காக லண்டன் சென்றார். சென்ற இடத்தில் நோய் வாய்ப்பட்டு டாக்டர் நாயர் மரணத்தைத் தழுவினார். இதில் கொடுமை என்னவென்றால், அப்பொழுது லண்டனில் இருந்த காங்கிரஸ் பார்ப்பனத் தலைவர்கள் ஒரு மரியாதைக்காகக்கூட நாயர் உடலுக்கு மரியாதை செலுத்தச் செல்லவில்லை. (வாழ்க பார்ப்பனர்களின் இனவெறி!).

நாயரின் மறைவுச் செய்தி கேட்டு செனனைத் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பார்ப்பனர்கள் தேங்காய் உடைத்து மகிழ்ந்து கொண்டாடினார்கள்.
இந்தச் சான்றிதழ், அளவுகோல் ஒன்று போதாதா பார்ப்பனர் அல்லாதாருக்கு டாக்டர் நாயர்பெருமான் பாடுபட்டதன் அருமைக்கும், பெருமைக்கும்?

17.7. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...