திங்கள், 17 ஜூலை, 2017

விக்டோரியா


சென்னையின் வெள்ளை மாளிகையான மாநகராட்சி கட்டடத்தின் அருகில் உள்ள விக்டோரியா பப்ளிக் ஹால் பற்றி ஒரு தகவல் ஏடுகளில் வெளிவந்துள்ளது. பழம்பெருமை வாய்ந்த (1890) இந்த மன்றம் மாநகராட்சியால் ரூ.3 கோடி செலவில் புதுப்பிக்கப்படுகிறது என்பதுதான் அந்தச் செய்தி. மாநகரத் தந்தை மா. சுப்பிரமணியன், கட்டட வேலைப்பாடுகளை நேரில் பார்த்த செய்தியும் வெளிவந்துள்ளது.

ஒரு கட்டடத்தைப்பற்றி அப்படி என்ன முக்கியத்துவம் இருக்கிறது? பார்ப்பனர் அல்லாதாரின் உரிமை முழக்க இயக்கமான தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் (நீதிக்கட்சி)பற்றி எண்ணும்போது, பல கட்டடங்கள் நினைவிற்கு வந்துதான் தீரவேண்டும்.

திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள டாக்டர் சி. நடேசனார் அவர்களின் மருத்துவமனைத் தோட்டம், திருவல்லிக்கேணி உயர்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி அக்பர் சாகிப் தெருவில் உருவாக்கப்பட்ட மாணவர் தங்கும் விடுதி, காஸ்மாபாலிட்டன் கிளப் போன்ற இடங்கள் நீதிக்கட்சியோடு தொடர்பு கொண்டவை.

அதில் விக்டோரியா பப்ளிக் ஹாலுக்குக் கூடுதல் முக்கியத்துவம் உண்டு. அந்த மண்டபத்தில்தான் முதன் முதலாக, தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பார்ப்பனர் அல்லாத முக்கிய தலைவர்கள் பலரும் கூடி பார்ப்பனர் அல்லாதாருக்கென்று ஓர் அரசியல் கட்சியைத் தொடங்குவது என்று முடிவு எடுக்கப்பட்டது. (20.11.1916) அத்துடன் பார்ப்பனர் அல்லாதாரின் உரிமைகளை ஈட்டுவதற்காகவும், நலன்களைப் பாதுகாப்பதற்காகவும் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் ஏடுகள் வெளியிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த மூன்று ஏடுகளை உருவாக்கிட தென்னிந்திய மக்கள் சங்கம் (ளுடிரவா ஐனேயை ஞநடியீடநள ஹளளடிஉயைவடி டுவன) என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பின் சார்பில் திராவிடன் என்ற தமிழ்நாளிதழ் தொடங்கப்பட்டது. என். பக்தவத்சலம் பிள்ளை இதன் ஆசிரியர்; ஜஸ்டிஸ் என்ற ஆங்கில நாளேட்டுக்கு டாக்டர் டி.எம். நாயர் ஆசிரியர்; ஆந்திரப் பிரகாசிகா என்ற தெலுங்கு இதழுக்கு ஆசிரியர் .சி. பார்த்தசாரதி நாயுடு ஆசிரியர் ஆவார்.

ஜஸ்டிஸ் என்ற ஏட்டின் பெயரே நாளடைவில் இக்கட்சியின் பெயராகவே நாட்டு மக்கள் மத்தியில் புழக்கத்தில் வந்துவிட்டது.

நாடார் மகாஜன சங்கத்தின் இரண்டாவது கூட்டமும் இந்த விக்டோரியா மன்றத்தில் தான் நடைபெற்றுள்ளது.

விக்டோரியா பப்ளிக் ஹால் என்கிற கட்டடம் புதுப்பிக்கப்படும் நிலையில், இந்தப் பழம்பெரும் பெருமைக்குரிய வரலாற்று நினைவுகளும் பார்ப்பனர் அல்லாதார் நெஞ்சத் தொட்டிலில் இன்ப அசைவுகளாகத் தவழட்டுமே!

16.7. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : ஒற்றைப்பத்தி - 3

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...