ஞாயிறு, 16 ஜூலை, 2017

சானியா மிர்சா


டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை சானியா மிர்சாவின் திருமணம் தேவையற்ற சர்ச்சைக்கு உட்படுத்தப்பட்டு விட்டது.

பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டுக்காரர் சோயிப் மாலிக்கும், சானியாவுக்கும் திருமணம் வரும் 15ஆம் தேதி அய்தராபாத்தில் நடைபெற உள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரை  இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் எப்படி திருமணம் செய்துகொள்ளலாம் என்ற வினாவை இந்துத்துவாவாதிகள் கிளப்புகின்றனர்.

இந்து மக்கள் கட்சி என்றும் பஜ்ரங்தள் என்னும் (பஜ்ரங் என்றால் குரங்கு என்று பொருள்) சொல்லிக் கொள்ளும் இந்து வெறி அமைப்புகள் சானியாவின் படங்களைத் தீயிட்டுக் கொளுத்தியி-ருக்கின்றனர்.
ஒருவர் யாரைத் திருமணம் செய்துகொள்வது என்று அந்த ஒருவரின் தனிப்பட்ட உரிமையாகும். அதில் குறுக்கிட இந்தக் குரங்குகள் கூட்டத்திற்கு அதிகாரம் கொடுத்தவர்கள் யார்?

இந்துத்துவா கும்பலின் கண்மூடித்தனமான மதவெறிதான் இதில் தலை கொழுத்து நிற்கிறதே தவிர, அறிவுப்பூர்வமான தலையீடு இதில் கிஞ்சிற்றும் இருக்கிறதா?

இந்தியாவைச் சேர்ந்த ஒருவரும், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று தடை சட்ட ரீதியாக ஏதேனும் உள்ளதா?

இவ்வளவுக்கும் பார்த்தால் திருமணம் செய்துகொள்ளப் போகும் இருவரும் இஸ்லாமியர்கள் மத மறுப்புத் திருமணம்கூட இல்லை. சானியா இந்துவாக இருந்து, பாகிஸ்தான் முஸ்லிமை திருமணம் செய்துகொண்டால், அடேயப்பா நாடே பற்றி எரிந்திருக்குமோ!

பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட இந்தியா வந்த நிலையில் ஆடுகளத்தையே சேதப்படுத்திய வானரக் கும்பல் ஆயிற்றே!

பிரிட்டீஷ் ராணியும், போப்பும் இந்தியா வந்தபோதுகூட, அவர்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய வானரப் படைகள் எதைத்தான் செய்யமாட்டார்கள்?

மத உணர்வோடு இது போன்ற போக்கிரித்தனமான வேலைகளில் ஈடு படுபவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டாமா?

வன்முறைக்கு வைத்தியம் சட்டரீதியான அடக்குமுறைதான். இல்லாவிட்டால், தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்தான்!

2.4. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 3,


ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...