ஞாயிறு, 16 ஜூலை, 2017

ஆரியர்களே ஆரம்பியுங்கள்!


கூவுங்கள் ஆரியர்களே கொக்கரியுங்கள்! தமிழ் மீது மோதிக் கொள்ளுங்கள். தமிழரின் முயற்சிக்கெல்லாம் தடைசெய்யுங்கள். தமிழ் மொழியைத் தழைக்க விடாதீர்கள்; தமிழிலே வடமொழியை, ஆங்கிலத்தை, இந்தியைக் கலக்கிக் குழப்புங்கள். தமிழன், தன்னைத் தமிழன் என்றுரைத்தால், சீறுங்கள். தமிழ் மொழியில் இசை இருக்கட்டும் என்றால், எதிர்த்துப் பேசுங்கள். கலைச் சொற்களுக்கு வடமொழியே இருக்க வேண்டும் என்று வாதாடுங்கள். தமிழனைத் தாழ்ந்த ஜாதி என்று சொல்லுங்கள். கூட இருக்கக்கூடாது என்று கட்டளையிடுங்கள். கோயிலிலும் குளத்திலும் இழிவுபடுத்துங்கள். சாப்பாட்டு விடுதிகளிலும் சாக்கடை இடத்தையே தமிழருக்குத் தாருங்கள். உமது ஆணவச்செயலை தமிழ் வாதத்தை, ஆரியத்தை நாம் வரவேற்கிறோம்.
ஆம்! உமது எதிர்ப்பு வளர வளரத்தான். தமிழனின் உள்ளத்தில் வேதனை பிறக்கும். வேதனை வளர்ந்தால் அவன் வேல்பட்ட புலிபோலச் சீறுவான். அந்தச் சீற்றம் கிளப்பிவிட்டால், நாங்கள் ‘ஜெயமுண்டு பயமில்லை மனமே’ என்று பாடும் காலம் பிறக்கும்! ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற எண்ணம், உருவமாக அமையும் காலம் தோன்றும். சேரனும், சோழனும், செந்தமிழ் நாட்டில், தமிழராட்சி தோன்றும். ஆகவே ஆரியர்களே ஆரம்பியுங்கள் உங்கள் போரை என்று நாம் ஆரியரை அறைகூவி அழைக்கின்றோம்.

அண்ணா  - (தமிழரின் மறுமலர்ச்சி நூலிலிருந்து...)

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.புங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...