ஞாயிறு, 16 ஜூலை, 2017

பக்தியும் புத்தியும்!


பூந்தமல்லி வட்டத்தில் நெற்குன்றம் முதல் திருவேற்காடுவரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கட்டடங்கள் (கோயில்கள் உள்பட) இடித்துத் தள்ளப்பட்டன. 60 கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. சட்டத்தை மீறி அரசு நிலங்களையும், ஆற்றையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டவைகளையும் அரசு நிலத்தில் உருவாக்கப்பட்ட தோப்புகளையும் இடித்து முடித்தனர்.

சட்ட விரோதமானவற்றை இடித்தது சட்டப்படி சரியானதே! அரசு அதிகாரிகள் தம் கடமையைத்தான் செய்திருக்கிறார்கள்.

இதில் வேடிக்கை என்ன தெரியுமா? இந்தக் கட்டடங்களை இடிக்கத் தொடங்குமுன் அரசு அதிகாரிகள் பூஜை செய்து பக்தி செலுத்தி, அதற்குப் பின்தான் தங்கள் கடமைகளைச் செய்ய முற்பட்டுள்ளனராம்.
கடவுள் பக்தி என்கிற மூட நம்பிக்கை அதிகாரிகளாக இருக்கக் கூடியவர்களைக் கூட ஆட்டிப் படைப்பதை நினைத்தால் ஒரு பக்கத்தில் பரிதாபமாகவும், இன்னொரு பக்கத்தில் எரிச்சலாகவும் இருக்கிறது.

படிப்புக்கும், பகுத்தறிவுக்கும் சம்பந்தமில்லாத வகையில் நம் நாட்டுக் கல்வித் திட்டங்கள் இருக்கின்றன என்று இதன்மூலம் தெரியவில்லையா?

வயிற்றுப் பிழைப்புக்கு லைசென்ஸ் என்று நம் நாட்டுக் கல்வி முறையைப் பற்றி தந்தை பெரியார் குறிப்பிட்டார்கள். அது நூற்றுக்கு நூறு சரி என்பதற்கு வேறு என்ன எடுத்துக்காட்டுத் தேவை?

சட்ட விரோத காரியத்தைத் தடுப்பது என்பது சரியானதுதானே? அதில் என்ன குற்றம் இருக்கிறது?

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்என்பதுபோல பக்தி நோய் பிடித்து ஆட்டும் மூளையினர்க்கு எந்தக் காரியத்தைச் செய்தாலும் மிரட்சியும், குற்ற உணர்வும் தான் மிஞ்சும்.

விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கும்  எதையும் சீர்தூக்கிப் பார்க்கும் சிந்தனையைத் தூண்டும் கல்வி முறை, படிப்பு முறை நம்நாட்டில் இல்லாததுதான் இதற்குக் காரணமாகும்.

கோயிலை  அதன் மதிலை இடிக்கப் போகிறோமே என்பது அவர்களின் எண்ணமாக இருக்குமானால், சட்டத்துக்குப் புறம்பாகக் கோயிலை இரவோடு இரவாகக் கட்டி விடுகிறார்களே, அரசு நிலத்தை ஆக்கிரமிக்கிறார்களே அது குற்றம் தானே என்கிற எண்ணம் ஏன் ஏற்படவில்லை? , பக்தி வந்தால்தான் புத்தி போய்விடுமோ!

27.12.2005 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...