ஞாயிறு, 16 ஜூலை, 2017

கலீலியோ


கலீலியோ (1564-1642) விஞ்ஞானி, பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்பதை  அறிவியல் ரீதியாகச் சொன்னவர்.

பூமி தட்டையானது என்ற கருத்துடைய பைபிளுக்கு விரோத-மானது இந்தக் கருத்து என்று கத்தோலிக்க சபை விஞ்ஞானி கலீலியோவுக்கு வீட்டுக் காவல் தண்டனையை அளித்து (அந்நாள்தான் இந்நாள் 1633).  சாகும் வரை அந்தத் தண்டனையை அனுபவித்தார்.

விஞ்ஞானி புரூனோவை எரித்தது போல கலீலியோவை எரிக்கவில்லை. அதுவரை வேண்டுமானால் மகிழ்ச்சி கொள்ளலாம்.

மதம் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை என்பதற்கு இந்தத் தண்டனை ஒன்றே போதும். இது மட்டுமல்ல, நோய் என்பது மனிதன் செய்த பாவத்திற்கு கடவுள் கொடுத்த தண்டனை என்பது கத்தோலிக்கர்களின் அசைக்கமுடியாத கருத்து. அதனால்தான் அம்மைக்குத் தடுப்பூசி கண்டுபிடித்த ஜென்னர் எதிர்க்கப்பட்டார்.

ஜென்னரின் கண்டுபிடிப்புக்கு ஆதரவாக இருந்தார் ஒரு மருத்துவர்  என்பதற்காக அவரைக் கொலைக் குற்றத்தின் கீழ் விசாரிக்க வேண்டும் என்றனர் மதக் குருமார்கள்.

ரோஜர் பேக்கன் என்ற விஞ்ஞானி (1214 -1294) தொலை நோக்காடி, வெடி மருந்து, கடிகாரம், நீராவியின் சக்தி முதலியவற்றைக் கண்டுபிடித்தார். இது கடவுளுக்கு விரோதமான நாத்திகம் என்று கண்டிக்கப்பட்டது. இவருக்கு உரிய இடம் வெளிச்ச உலகம் அல்ல என்று கூறி, சாகும் வரை - 14 ஆண்டுகள் சிறைப்படுத்தினர்.

காலம் மாறியது; கருத்துக்களும் மாற ஆரம்பித்தன. கத்-தோலிக்க மக்களின் தலைவரும் வாட்டிகன் நகரின் ஆட்சித் தலைவருமான போப் - 360 ஆண்டுகளுக்குப் பிறகு கலீலியோவுக்கு தண்டனை கொடுத்தது தவறு என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.

வாடிகன் நகரில் முக்கியமானவர்களும், விஞ்ஞானிகளும், நோபல் பரிசு பெற்றவர்களும் நிறைந்திருந்த கூட்டத்தில்தான் பகிரங்கமாக போப் இதனை ஒப்புக்கொண்டார் (31.10.1992)

இப்போது விஞ்-ஞானிகள் செயற்கை உயிரையே கண்டுபிடித்துவிட்டார்கள் இதன் மூலம் எல்லா மதங்களுமே மரணக் குழியில் வீழ்ந்துவிட வில்லையா?

22.6. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : ஒற்றைப்பத்தி - 3

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...